பக்கம் எண் :


366 திருப்புகழ் விரிவுரை

 

இல்லும்=அந்தச் செல்வம் நிறைந்த வீடும், இளையோரும்=மக்களாகிய இளைஞர்களும், மெல்ல அயல் ஆக=மெல்ல வேறாகும்படி, வல் எருமை=வலிய எருமைமீது வருகின்ற, மாய சமனாரும்=மாயத்தில் வல்ல இயமனால், எள்ளி=என்னை இகழ்ந்து, எனது ஆவி கொள்ளை கொள்ளும் நாளில்=அடியேனுடைய உயிரைக் கொள்ளை யடித்துக் கொண்டுபோகும் அந்த நாளில், உய்ய ஒரு நீ பொன் கழல் தாராய்=அடியேன் உய்யும் பொருட்டு ஒப்பற்ற தேவரீர் உமது அழகிய பாத மலரைத் தந்தருளுவீராக.

பொழிப்புரை

பழமையான வேதங்கள் தேடியுங் காண முடியவில்லை யென்று கூறுகின்ற சிவபெருமானுக்கு உபதேச மொழியைக் கூறிய குருநாதரே!  துள்ளி விளையாடுகின்ற புள்ளிமான் நாணும்படித் தன் அழகுக்கு நிகரில்லை யென்று இகழ்கின்றவளாகிய வள்ளிநாயகி வாழ்கின்ற வனத்தில் சென்று அவளுடன் வாழ்கின்றவரே!  வலிய அசுரர்கள் மாளவும் நற்குணமுடைய தேவர்கள் வாழும்படியும் விரைந்து கூரிய வேலாயுதத்தை விட்டவரே!  வள்ளிக்கொடி படர்கின்ற சாரலுடன் கூடிய வள்ளிமலையின் மீது வீற்றிருக்கின்ற வள்ளி மணவாளரே!  பெருமிதம் உடையவரே!  தாமரை யிதழ் போன்ற கண்களாலும், முல்லையரும்பு போன்ற புன்முறுவலாலும் நான் துன்புறும்படி ஆசையைக் கடல்போலத் தருகின்றவர்களும், அள்ளியெடுக்கலாம் போன்ற இனிதாக இருக்கும் நடு இரவின் இருள்போன்ற மனத்தையுடையவர்களுமாகிய பொது மாதர்களும், செல்வம் நிறைந்த வீடும், மக்களும், மெல்ல எனக்கு அயலாகும்படி, வலிய எருமைமீது வந்து மாயத்தைச் செய்யும் இயமன், என்னை இகழ்ந்து, என் உயிரைக் கொள்ளையடித்துக் கொண்டு போகும் அந்நாளில் ஒப்பற்றவராகிய தேவரீர் உமது அழகிய திருவடிகளைத் தந்தருளுவீராக.

விரிவுரை

அல்லி விழியாலும்:-

அல்லி-தாமரை.

“அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரந் தோளன்” -- பெரிய திருமொழி. கண்கள் தாமரை இதழைப்போல் இருக்கும். கண்கள் சிவப்பாக இருந்தால் போகத்தைக் குறிக்கும். வெண்மையாக இருந்தால் நோயைக் குறிக்கும், செம்மையும் வெண்மையுங்