பக்கம் எண் :


370 திருப்புகழ் விரிவுரை

 

வள்ளிபடர் சாரல் வள்ளிமலை:-

வள்ளிக் கொடி அதிகம் படர்வதனால் அந்த மலை வள்ளி மலை யெனப்பட்டது.

நிலங்கட்குப் பெயர் இந்நிலத்தில் உள்ள மரங்களால் அமைந்தது.

மருதமரம் மிகுந்திருப்பதனால் மருதம் என்றும், முல்லைக் கொடி படர்ந்திருப்பதால் முல்லையென்றும், நெய்தல் என்ற செடியிருப்பதனால் நெய்தல் என்றும், பாலை மரம் அதிகம் இருப்பதனால் பாலையென்றும், குறிஞ்சி மரம் இருப்பதனால் குறிஞ்சி என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

கருத்துரை

வள்ளிமலை மேவும் வள்ளி மணவாளா! ஆவி பிரியும் அந்நாள் அடியேனைக் காத்தருள்வீர்.

79

      ஐயமுறு நோயு மையலும் வாவி
                னைவருமு பாயப்                           பலநூலின்
           அள்ளல் கட வாது துள்ளியதில்மாயு
                முள்ளமுமில் வாழ்வைக்                    கருதாசைப்
      பொய்யுமக லாத மெய்யைவள ராவி
                உய்யும்வகை யோகத்                          தணுகாதே
           புல்லறிவு பேசி யல்லல்படு வேனை
                நல்ல இரு தாளிற்                            புணர்வாயே
      மெய்ய பொழில் நீடு தையலைமு நாலு
                செய்யபுய மீதுற்                         றணைவோனே
           வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
                வெள்ள முது மாவைப்                    பொருதோனே
      வைய முழு தாளு மையமயில் வீர
                வல்லமுரு காமுத்                            தமிழ்வேளே
           வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
                வள்ளிமண வாளப்                        பெருமாளே.