வெள்ள முது மாவை:- உறுதி யிழந்த சூரபன்மன் இறுதியில் கடலில் ஒளிந்து எஃகு மாமரமாய் நின்றான். முருகவேள் வேலினால் அம் மாமரத்தைப் பிளந்து அழித்தருளினார். “கடற்சலந்தனிலே யொளி சூரனை உடற்பகுந்திரு கூறெனவேயது கதித்தெழுந்தொரு சேவலுமாமயில் விடும்வேலா” -(மனத்திரைந்) திருப்புகழ். வல்ல முருகா:- வல்லம்-திருவல்லம் என்ற திருத்தலம். இது நீவா நதிக் கரையில் இருக்கின்றது. சென்னையிலிருந்து காட்பாடிக்கு போகும் இருப்புப் பாதையில் காட்பாடிக்கு 12 மைலுக்குக் கிழக்கில் உள்ளது. இத்தலம் ஞான சம்பந்தராலும், அருணகிரி நாதராலும், சேக்கிழாராலும் பாடப்பெற்றது. வில்வவனம் என்றும் பெயர் பெற்றது. அருமையான க்ஷேத்திரம். கருத்துரை வள்ளி மலை முருகா! உயிர் பிரியும் போது உன் திருவடி தந்து ஆட்கொள்வீர். கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்து பொய்யொத்த வாழ்வு கண்டு மயலாகிக் கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தார் மேல்வி ழுந்து கள்ளப்ப யோத ரங்க ளுடன்மேவி உய்யப்ப டாமல் நின்று கையர்க்கு பாய மொன்று பொய்யர்க்கு மேய யர்ந்து ளுடைநாயேன் உள்ளப்பெ றாகநின்று தொய்யப்பட டாம லென்று முள்ளத்தின் மாய்வ தொன்றை மொழியாயோ ஐயப்ப டாதஐந்து பொய்யற்ற சோலை தங்கு தெய்வத்தெய் வானை கொங்கை புணர்வோனே அல்லைப்பொ றாமுழங்கு சொல்லுக்ர சேவ லொன்று வெல்லப்ப தாகை கொண்ட திறல்வேலா வையத்தை யோடி யைந்து கையற்கு வீசுதந்தை மெய்யொத்த நீதி கண்ட பெரியோனே |