பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 375

 

       வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
                வள்ளிக்கு வேடை கொண்ட              பெருமாளே.

பதவுரை

ஐயம் படாத=சந்தேகப்படாதவாறு, பொய்யற்ற=பொய்யாத வகையில் நினைத்ததைத் தருகின்ற, ஐந்து சோலை தங்கும்=ஐந்து கற்பகச் சோலையில் வளர்ந்த, தெய்வ ஆனை= தெய்வ மகளாகிய தெய்வயானை யம்மையின், கொங்கை புணர்வோனே=தனத்தைச் சேர்பவரே! அல்லை பொறா முழங்கு=இரவைப் பொறுக்காதபடி கூவும், சொல்= கொக்கறுகோ என்ற சொல்லை யுடைய, உக்கரு சேவல் ஒன்று=வேகமுள்ள சேவல் பொருந்திய, வெல் அப்பதாகைகொண்ட=வெற்றியையுடைய அந்தக் கொடியை யுடைய, திறல் வேலா=வலிமையுடைய வேலாயுதரே! வையத்தை ஓடி=உலக முழுவதும் ஓடி வலம் வந்து, ஐந்து கையற்கு வீசு தந்தை=ஐங்கர விநாயகருக்குக் கனியைத் தந்த சிவபெருமானுக்கு, மெய் ஒத்த நீதி கண்ட=உண்மையான நீதி முறையை உபதேசித்த, பெரியோனே=பெரியவரே! வள்ளி குழாம் அடர்ந்த=வள்ளிக் கொடியின் கூட்டம் நெருங்கியுள்ள, வள்ளி கல் மீது சென்று=வள்ளி மலையின்மேல் சென்று, வள்ளிக்கு வேடைகொண்ட=வள்ளி நாயகியின் மீது விருப்பங்கொண்ட, பெருமானே=பெருமையிற் சிறந்தவரே! கை ஒத்து வாழும்=ஒழுக்கநெறியை யறிந்து அதன்படி வாழும், இந்த மெய் ஒத்த வாழ்வு இகந்து=இந்த உண்மையான வாழ்வை விடுத்து, பொய் ஒத்த வாழ்வு கண்டு=பொய் நிறைந்த வாழ்வைப் பார்த்து, மயல் ஆகி=அதிக மோகங் கொண்டு, கல்லுக்கு நேரும்=கல்லைப் போல் கடினமாகவுள்ள, வஞ்ச உள்ளத்தார்மேல் விழுந்து=வஞ்சக உள்ளத்தையுடைய வேசையர் மேல்விழுந்து, கள்ள பயோதரங்கள் உடன்மேவி=கள்த்தனம் பொருந்திய கொங்கைகளின் மீது பொருந்தி, உய்யப் படாமல் நின்று=உய்யும் வழியில் சேராமல் நின்று, கையர்க்கு=வஞ்சகருடனும், உபாய ஒன்று பொய்யர்க்குமே=தந்திரஞ்செய்யும் பொய்யருடனுமே பழகி, அயர்ந்து=சோர்வடைந்து, உள் உடை நாயேன்=உள்ளம் உடைந்த அடியேனுக்கு, உள்ள பேறாக நின்று=உள்ளத்திற் பெறுதற்கரிய பேறாக நின்று, தொய்யப் படாமல்=சோர்வு அடையாமல், என்றும் உள்ளத்தின் மாய்வது=எப்போதும் நிலைத்துள்ள மனம் இறந்த நிலையாகிய, ஒன்றை= உபதேசமொழியை, மொழியாயோ=சொல்லமாட்டீரோ?

பொழிப்புரை

சந்தேகமின்றியும் பொய்க்காதும் நினைத்ததைத் தருகின்ற கற்பக முதலிய ஐந்து தருக்களின் சோலையில் வளர்ந்த தேவ மகளாகிய தெய்வயானை யம்மையின் தனத்தில் சேர்பவரே! இரவு நேரத்தைப் பொறுக்காமல் கொக்கறுகோ என்று முழங்குகின்ற வேகமுள்ள சேவற் கொடியுடைய வலிய வேலாயுதக் கடவுளே! உலக முழுவதும் ஓடி வலம் வந்து