நில்லார் அறத்தை நினையா நின்னாமம் நினைவில் சற்றும் இல்லா இருந்தென் இறந்தென் புகல்கச்சி யேகம்பனே. -பட்டினத்தார். கையர்க் குபாயமென்று பொய்யர்க்குமே யயர்ந்து:- வஞ்சகருடனும், தந்திரமே புரியும் பொய்யருடனும் பழகி வாடுகின்றார்கள். தீயவர் நட்பு தீயினும் தீயது. தீ உடம்பை மட்டும் சுடும். தீயவர் நட்பு உள்ளம் உணர்வு உயிர் முதலிய எல்லாவற்றையும் சுடும். உள்ளப் பெறாகநின்று:- “இப்படி யலைந்த அடியேன் உள்ளத்தில் முருகா! நீ பெறும் பேறாக நின்று அருள் செய்” என்று சுவாமிகள் வேண்டுகின்றார். “என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா” -திருவாசகம். உள்ளத்தின் மாய்வ தொன்றை மொழியாயோ? :- மனம் கொண்ட இடமே சுகாரம்பமாகும். மனோலயம் அடைந்த இடத்தில் ஆனந்த ஊற்று சுரக்கும். போக்கும் வரவும் இரவுபகலும் புறம்பும் உள்ளும் வாக்கும் வடிவு முடிவும் இல்லாதொன்று வந்துவந்து தாக்கும் மனோலயந் தானேவரும் எனைத்தன் வசத்தே ஆக்கும் அறுமுகவா! கொல்லாணாதிந்தா ஆனந்தமே. -கந்தரலங்காரம். சினமிறக்கக் கற்றாலும் சித்தி யெல்லாம் பெற்றாலும் மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே. -தாயுமானார். ஐயப்படாத ஐந்து பொய்யற்ற சோலை:- கற்பகம் என்ற தெய்வத்தரு நினைத்ததைத் தரும் இயல்புடையது. அதில் சந்தேகம் இல்லை பொய்யுமில்லை. சந்தனம், அரி சந்தானம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம் என்ற ஐந்து தருக்கள். அல்லைப்பொறா முழங்கு கொல்லுக்ர சேவல்:- அல்-இரவு. இரவு சேவலுக்கு வெறுப்பைத்தரும். அதனால் விடியற்காலையில் மகிழ்ந்து கொக்கறுகோ என்று கூவுகின்றது. ஞானவொளியைக் கண்டு களிப்பது. அது நாத தத்துவம் என வுணர்க. சேவல் கூவுவதால் ஆணவ இருள் நீங்கும். |