பக்கம் எண் :


378 திருப்புகழ் விரிவுரை

 

வையத்தை ஓடி:-

கனி காரணமாகக் கந்தக் கடவுள் உலகம் முழுவதும் ஒரு நொடிக்குள் வலம்வந்து, எங்கும் நிறைந்தவர் தாம் என்பதை உணர்த்தியருளினார்.

      “இகலிமுது திகிரிகிரி நெரிய வளை கடல் கதற்
          எழுபுவியை யொருநொடியில்  வலமாக வோடுவதும்”
                                                   -சீர்பாதவகுப்பு.

வள்ளிக்கு வேடைகொண்ட:-

வள்ளி-இச்சாசக்தி. இறைவன் இச்சா சக்தியுடன் கூடுவதால் ஆன்மாக்களுக்கு இச்சை தோன்றி வினைகளை நுகர்ந்து வீடுபேறு எய்த ஏதுவாகும்.

கருத்துரை

வள்ளி காதலனே! அடியேனுக்கு மனோலயத்தை உபதேசித்தருள்வீர்.

81

  முல்லைக்கு மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள்
                பல்லுக்கும் வாடி யின்ப                   முயலாநீள்
           முள்ளுற்ற கால்மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து
               பள்ளத்தில் வீழ்வ தன்றி                     யொருஞான
      எல்லைக்கு மார ணங்கள் சொல்லிதொ ழாவ ணங்கு
               மெல்லைக்கும் வாவி நின்ற           னருள்நாமம்
           எள்ளற்கு மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்று
                முள்ளப்பெ றாரி ணங்கை            யொழிவேனோ
      அல்லைக்க வானை தந்த வல்லிக்கு மார்பி லங்க
               அல்லிக்கொள் மார்ப லங்கள்          புனைவோனே
           அள்ளற்ப டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி
                மெள்ளச்ச ரோரு கங்கள்                      பயில்நாதா
      வல்லைக்கு மார கந்த தில்லைப்பு ராரி மைந்த
                மல்லுப்பொ ராறி ரண்டு                         புயவீரா
           வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
                வள்ளிக்கு வேடை கொண்ட             பெருமாளே.

பதவுரை

அல்லைக்கு=இரவில், அ ஆனை தந்த=அந்த ஆனையாகிய கணபதி தந்து உதவிய, வள்ளிக்கு=வள்ளி பிராட்டிக்கு, மார்பு இலங்க=மார்பில் விளங்குமாறு, அல்லிக் கொள் மார்பு அலங்கல் புனைவோனே=