தாமரை மலர் மாலையை உமது மார்பிலிருந்து எடுத்துத் தரித்தவரே! அள்ளல் படாத= சேறு இல்லாத, கங்கை வெள்ளத்து வாவி தங்கி=கங்கையாற்றின் சரவணப் பொய்கையில் தங்கி, மெள்ள சரோகங்கள் பயில் நாதா=மெள்ள அங்குள்ள தாமரை மலர்களில் வீற்றிருந்த தலைவரே! வல்லைக்குமார=வல்லக் கோட்டையில் வீற்றிருக்கும் குமாரக் கடவுளே! கந்த=கந்தப் பெருமானே! தில்லை புராரி மைந்த=தில்லை யம்பதியில் உறைகின்றவரும், திரிபுரத்தை எரித்தவருமான சிவ குமாரரே! மல் பொரு ஆறு இரண்டுபுய வீரா=மல் யுத்தஞ் செய்யவல்ல பன்னிரு தோள்களையுடைய வீரமூர்த்தியே! வள்ளி குழாம் அடர்ந்த=வள்ளிக் கொடிகள் மீது சென்று, வள்ளிக்கு வேடை கொண்ட= வள்ளிபிராட்டி மீது விருப்பங் கொண்ட, பெருமாளே=பெருமையின் மிகுந்தவரே! முல்லைக்கும்=முல்லை மலர்க் கணைக்கும், மாரன் அம் கை வில்லுக்கும்= மன்மதனுடைய அழகிய மரத்தில் இருக்குங் கரும்பு வில்லுக்கும், மாதர் தங்கள் பல்லுக்கும் வாடி=மாதர்களின் புன்சிரிப்புக்கும் வாட்டத்தையடைந்து, இன்பம் முயலா= இன்பத்தைப் பெற முயன்று, நீள் முள் உற்ற கால் மடிந்து=நீண்டமுள் தைத்த கால் போல் மடங்கிக் கிடந்த, கொள்ளிக்கு மூழ்கி வெந்து=மோகத் தீயில் உள்ளம் வெந்து, பள்ளத்தில் வீழ்வது அன்றி=பாவப் படுகுழியில் வீழ்வதல்லாமல், ஒரு ஞான எல்லைக்கும்=ஒப்பற்ற ஞான எல்லையையும், ஆரணங்கள் சொல்லி தொழா வணங்கும் எல்லைக்கும்=வேத மந்திரங்களைக் கூறித் தொழுது வணங்கும் எல்லையையும், வாவி= அணுகாது விலகித் தாண்டி, நின்தன் அருள் நாமம்=உமது அருள் தரும் திருநாமத்தை, எள்ளற்குமால் அயர்ந்து=இகழ்ந்து பேசுவதற்கு ஆசைகொண்டு, உள்ளத்தில் ஆவ என்றும் உள்ள பெறார்=தங்கள் உள்ளத்தில் கடவுளே அபயம் என்னும் இரக்க வுணர்ச்சியை என்றும் எண்ணப் பெறாதவர்களான தீயர்வர்களின், இணங்கை ஒழிவேனோ=இணக்கத்தை அடியேன் விடமாட்டேனோ? பொழிப்புரை விநாயகப் பெருமான் யானையாக வந்து அச்சுறுத்த இரவில் வள்ளியைக்கவர்ந்து, உமது மார்பில் தரித்த தாமரை மலர் மாலையைப் புனைந்தவரே! சேறு இல்லாத கங்காநதியின் நீரினாலாய சரவணப் பொய்கையில் தங்கி, தாமரை மலரில் மெல்ல வீற்றிருந்தருளிய தலைவரே! வல்லக்கோட்டையென்ற தலத்தில் வாழும் குமார மூர்த்தியே! கந்தக் கடவுளே! தில்லையம்பதியில் இருக்கும் திரிபுரம் எரித்த சிவமூர்த்தியின் புதல்வரே! மற்போருக்கு உரிய பன்னிரு புயங்களையுடைய வீர மூர்த்தியே! வள்ளிக்கொடிகள் மிகுந்துள்ள வள்ளிமலையின் மீது சென்று வள்ளிபிராட்டியார் மீது விருப்பங்கொண்ட பெருமிதமுடையவரே! மன்மதனுடைய முல்லைக் கணைக்கும் கரும்பு வில்லுக்கும் மாதர்கள் புன்னகைக்கும் வாடி இன்பத்தைப் பெற முயன்று நீண்ட முள்தைத்த கால் போல் மடங்கிக் கிடந்து, காமத் தீயால் வெந்து, பாவப் படுபள்ளத்தில் வீழ்வதல்லாமல், ஒப்பற்ற |