பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 381

 

ஒரு ஞான எல்லைக்கும்:-

ஒப்பற்ற சிவஞானம் ஒன்றே முடிவாக நின்று ஆன்மாக்களுக்கு இன்ப எல்லையாக இருந்து அருள் செய்ய வல்லது.

ஆரணங்கள் சொல்லித் தொழாவணங்கு மெல்லைக்கும் வாவி:-

வாவுதல்-தாண்டுதல்.

பெரியோர்கள் வேத மந்திரங்களைக் கூறி இறிஅவனைத் தொழுது வணங்குவார்கள்.

தொழுவது-கரங்களால். வணங்குவது-தலையால்.

       “கைகாள் கூப்பித் தொழீர்”
      “தலையே நீ வணங்காய்”                           -அப்பர்.

      “வணங்கத் தலை வைத்து”              -மாணிக்கவாசகர்.

      “வந்தெதிரே தொழுதானை வணங்கினான்”       -கம்பர்.

இந்த அருள் நெறியைத் தாண்டிச் செல்வர் கீழ்மக்கள்.

 “தவநெறி தனை விடு தாண்டு காலியை”
                                       -(தரையினில்) திருப்புகழ்.

அருள்நாமம் எள்ளற்கு மாலயர்ந்து:-

கீழோர் இறைவனுடைய அருள் நாமத்தை இகழ்ந்து இடர்ப்படுவர்.

இணங்கை யொழிவேனோ:-

இத்தகைய மூடர்களது சேர்க்கையை அறவே ஒழிக்க வேண்டும்.

      “கண்ணாவா ரேனுமுனைக் கைத்தொழா ராயின் அந்த
          மண்ணாவார் நட்பை மதியேன் பராபரமே”                                                     -தாயுமானார்.

அல்லைக்கவானை தந்த வல்லிக்கு:-

அல்லைக்கு அ ஆனை தந்த வள்ளி.

இரவில் சென்று, விநாயகர் யானை வடிவாக வந்து அச்சுறுத்த அபயம் புகுந்த வள்ளியை முருகவேள் மாலையிட்டு மனம் புரிந்தருளினார்.