பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 383

 
82

  கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை
                துள்ளிக்க னார்க்க                             யுவகோப
           கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை
               கொள்ளைத்து ராற்பை                        பசுபாச
  அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை
                வெள்ளிட்ட சாப்பி                         சிதமீரல்
           அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்
                கொள்ளப்ப டாக்கை                     தவிர்வேனோ
  தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்
                வெள்ளுத்தி மாற்கு                     மருகோனே
           சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்
                புள்ளத்த மார்க்கம்                           வருவோனே
  வள்ளிச்சன் மர்க்கம் விள்ளைக்கு நோக்க
                வல்லைக்கு ளேற்று                   மிளையோனே
           வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
                வள்ளிக்கு வாய்த்த                        பெருமாளே.

பதவுரை

தெள் அத்தி சேர்ப்ப=தெளிவு பெற்ற அறிவு நிறைந்த தெய்வ யானையின் தலைவரே! வெள் அத்திமாற்கும்=வெள்ளையானையை யுடைய இந்திரனுக்கும், வெள் உத்தி மாற்கும்=வெண்மையான பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலுக்கும், மருகோனே=திருமருகரே! சிள் இட் காட்டில் உள்ள=சிள் வண்டுகள் நிறைந்த கானகத்தில் வாழ்ந்த, கிரார் கொல்புள்=கிராதகர்களான வேடர்கள் கொல்கின்ற பறவைகள் உள்ள, அந்த மார்க்கம்=காட்டு வழியில், வருவோனே=வருபவரே! வள்ளி சன்மார்க்கம்=வள்ளி பிராட்டியார் அநுட்டித்த நன்னெறி யென்னும் உபதேசத்தை, விள் ஐக்கு=கேட்ட தந்தையார்க்கு, நோக்க வல்லைக்குள் ஏற்றும்=ஒரு கணப்பொழுதில் உபதேசித்த, இளையோனே=இளம்பூரணரே! வள்ளி குழாத்து=வள்ளிக் கொடிகள் கூட்டமாய் நிறைந்திருக்கின்ற, வள்ளி கல் காத்த=வள்ளி மலையில் தினைப்புனங் காவல் செய்த, வள்ளிக்கு வாய்த்த=வள்ளிபிராட்டியாருக்கு வாய்த்த, பெருமாளே=பெருமையில் மிகுந்தவரே! கள்ள குவால் பை=கள்ளத்தனமான வஞ்சனை பொய் முதலிய துர்க்குணங்கள் நிறைந்த பை, தொள்ளை புலால் பை=ஓட்டைகளையுடைய மாமிசப் பை, இக்கனார்=துள்ளுகின்ற கரும்பு வில்லையுடைய மன்மதனால் உண்டாகின்ற, கயவு கோபம்=தளர்ச்சி கோபமாகிய, கள்வைத்த தோல் பை=கள்ளை வைத்த தோல் பை, பொள் உற்ற கால் பை=பொள்ளென விரைந்து செல்லும் காற்றடைத்த பை, கொள்ளை துரால் பை=யமன்