கொள்ளை கொண்டு போகின்ற செத்தையான பை, பசுபாச அள்ளல் பை=ஆன்மாவும் (உயிரும்) ஆணவமும் சேர்ந்த சேற்றுப்பை, மால் பை=மயக்கத்துக்கு இடமான பை, ஞெள்ளல் பை=குற்றங்கள் நிறைந்த பை, சீ பை=சீழ் நிறைந்த பை, வெள் இட்ட=கலப்பில்லாத, அசா=தளர்வுடைய, பிசிதம் ஈரல்=இறைச்சி இவைகளை, அள்ள=அள்ளி உண்ண. சுவாக்கள்=நாய்கள், சள் இட்டு இழா=சள்ளென்று குலைத்து இழுத்து, பல் கொள்ளப்படு ஆக்கை=பல்லினால் கடித்துக்கொள்ளும் இந்த உடம்பை தவிர்வேனோ=ஒழிக்கமாட்டேனோ? பொழிப்புரை தெளிந்த அறிவுள்ள தெய்வயானையின் கணவரே! வெள்ளையானையையுடைய இந்திரனுக்கும், திருப்பாற்கடலில் துயிலும் திருமாலுக்கு திருமருகரே! சிள்வண்டுகள் நிறைந்த கானகத்தில் வாழும் வேடர்கள் கொல்லுகின்ற பறவைகள் உள்ள காட்டு வழியில் வருபவரே! வள்ளி நாயகி மேற் கொண்ட சன்மார்க்கத்தைக் கூறுமாறு சிவபெருமான் கேட்க கண்ணிமைப் பொழுதில் அவருக்கு உபதேசித்த இளையவரே! வள்ளிக்கொடிகள் நிறைந்துள்ள வள்ளிமலையில் தினைப் புனத்தை காவல் செய்த வள்ளியம்மைக்கு வாய்த்த பெருமிதமுடையவரே! களவு பொய் முதலிய தீக்குணங்கள் நிறைந்த பை; ஓட்டையுடைய இறைச்சிப் பை; துள்ளுகின்ற கரும்பு வில்லையுடைய காமனால் விளையுந் தளர்வு கோபம் என்ற கள் வைத்த தோள் பை; விரைந்து போகின்ற காற்றின் பை; இயமன் கொள்ளையடித்துக்கொண்டு போகின்ற செத்தையான பை; உயிரும் ஆணவமும் அடங்கிய சேற்றுப் பை; மயக்கத்தையுடைய பை; குற்றம் நிறைந்த பை; சீழ் ஒழுகும் பை; கலப்பில்லாத தளர்ச்சியுடைய இறைச்சி ஈரல் இவைகளை அள்ளித் தின்னும் நாய்கள் சள்ளென்று குலைத்து பல்லால் கடித்து இழுத்துக் கொண்டு பொகும் இந்த உடம்பை ஒழிக்க மாட்டேனோ? விரிவுரை கள்ளக் குவாற் பை:- குவால்-கூட்டம். கள்ளத்தனமான பொய் வஞ்சனை களவு சூது வாது முதலிய தீக்குணங்களின் கூட்டம் நிறைந்த பை இந்த உடம்பு. உடம்பைப் பலவகையான பை என்று இத்திருப்புகழில் அடிகளார் கூறுகின்றார். |