பக்கம் எண் :


388 திருப்புகழ் விரிவுரை

 

விள்ளைக்கு:-

விள் ஐக்கு-விள்ளுவாய் என்று கேட்ட தந்தைக்கு.

நோக்கவல்லைக்கு ளேற்றும் இளையோனே:-

வல்லை-விரைவு. நோக்கம்-கண்ணிமைக்கு நேரம்.

இமைப்பொழுதுக்குள் தந்தைக்கு கந்தவேள் உபதேசித்தருளினார்.

கருத்துரை

வள்ளிமலை மேவு வள்ளலே! இந்த மாய உடம்பை யொழித்து அருள்செய்வீர்.

83

  வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்கு
                வில்லிக்க தாக்க                          ருதும்வேளால்
           வில்லற் றவாக்கொள் சொல்லுற்று காப்பொய்
                யில்லத் துறாக்க                                வலைமேவு
  பல்லத்தி வாய்க்க அல்லற் படாக்கை
                நல்லிற் பொறாச்ச                               மயமாறின்
           பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர்
                கல்விக் கலாத்த                           லையலாமோ
  அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து
                சொல்குக்கு டார்த்த                      இளையோனே
           அல்லுக்கு மாற்றி னெல்லுக்கு மேற்புல்
                கெல்லைப்ப டாக்க                     ருணைவேளே
  வல்லைக்கு மேற்றர் தில்லைக்கு மேற்றர்
                வல்லிக்கு மேற்ற                           ருள்வோனே
           வள்ளிக் குழாத்து வள்ளிக்கல் காத்த
                வள்ளிக்கு வாய்த்த                           பெருமாளே.

பதவுரை

அல்லை கொல் வார்த்தை சொல்லிக்கு+இராக் காலம் ஒழியாதோ என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற தலைவிக்கு, இதம் ஒத்து சொல்=இதமாக ஒத்து இரவை யொழிக்கின்ற குரலாகக் கூவுகின்ற, குக்குடம் ஆர்த்த=சேவலைக்