பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 389

 

கொடியாகக் கட்டிய, இளையோனே=இளம்பூரணரே! அல்லுக்கும்=இரவையும், ஆற்றில் எல்லுக்கும் மேல் புல்கு=வழி தெரிவிக்கின்ற பகலையும் கடந்த மேல் நிலையில் மருவி, எல்லை படா கருணைவேளே=அளவு படுத்த முடியாத கருணைக் கடலாகிய வேளே! வல்ஐக்கும் ஏற்றார்=சிதம்பரத் தலத்துக்கு ஏற்றவரும், வல்லிக்கும் ஏற்றார்=சிவகாம வல்லிக்கும் ஏற்றவருமாகிய சிவபெருமான், அருள்வோனே=அருளிய குமாரரே! வள்ளி குழாத்து=வள்ளிக் கொடிகள் கூட்டமாகவுள்ள, வள்ளிக் கல் காத்த=வள்ளி மலையில் தினைப்புனங்காவல் செய்திருந்த, வள்ளிக்கு வாய்த்த=வள்ளிபிராட்டியாருக்கு வாய்த்த, பெருமாளே=பெருமையின் மிகுந்தவரே! வெல்லி குவீக்கும்=உலகத்தை வென்று குவிக்கின்ற, முல்லை கை=முல்லை மலர்க்கணையை ஏந்திய கையையுடைய, வீக்குவில்=நாண்பூட்டிய வில், இக்கு அதா கருது வேளால்=கரும்பாக விரும்பிய மன்மதனால், வில் அற்று=ஒளி மழுங்கி, அவா கொள் சொல் அற்று=ஆசை கொண்டு உரைக்கும் சொல்லும் போய், உகா=மனம் நெகிழ்ந்து, போய் இல்லத்து உறா=பொய் வாழ்வுடைய வீட்டிற்குச் சென்று, கவலை மேவு=கவலை யடைகின்ற, பல் அத்தி வாய்க்க=பல கவலைக்கடல் நேர, அல்லல் படு ஆக்கை=துன்பப்படு உடம்பை உடையவனாகிய சிறியேன், நல்லில் பொறாத=நன்மார்க்கத்தைத் தரியாத, சமயம் ஆறின்=ஆறு சமயங்களின், பல் அத்த மார்க்க=பல பொருள்களைக் கூறும் வழியையுடைய, வல் அர்க்கர்=வலிய அரக்கராகிய, மூர்க்கர்=மூர்க்கர்களுடைய, கல்விகலாத்து=கல்விக் கலகத்துள், அலையலாமோ=அடியேன் அலைவது முறையோ?

பொழிப்புரை

இரவுகாலம் ஒழியாதோ என்று கூறி வருந்துகின்ற தலைவிக்கு இதமாக அவளுடன் ஒத்து, இரவையகற்றும் குரலாகக் கூவுகின்ற சேவல் கொடியையுடைய இளம் பூரணரே, இரவையும் சிறிது வழியைப் புலப்படுத்துகின்ற பகலையும், (கேவல சகலம்) கடந்த தூய நிலையில் விளங்குகின்ற, அளவற்ற கருணாமூர்த்தியாகிய செவ்வேட் பரமரே! வலிமையும் அழகும் உடைய இடபத்தை வாகனமாகவுடையவரும், தில்லையம்பதிக்கும் சிவகாம சுந்தரிக்கும் ஏற்றவரும் ஆகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே! வள்ளிக்கொடிகள் நிரம்பவும் படர்ந்த வள்ளி மலையில் தினைப்புனத்தைக் காவல் செய்த வள்ளி நாயகிக்கு வாய்த்த பெருமிதம் உடையவரே! உலகத்தை வென்று குவிக்கின்ற முல்லை மலர்க்கணையை ஏந்திய கையையுடையவனும் நாண் பூட்டிய வில் கரும்பாக விரும்பிக் கொண்டவனுமாகிய மன்மதனால், ஒளி மழுங்கியும், ஆசைகொண்டு உரைக்கும் சொல்லும்போய், மனம் நெகிழ்ந்தும் பொய் வாழ்வுடைய வீட்டில் இருந்து கவலையடைந்து, பல துன்பக் கடல் நேர, துயரப்படுகின்ற உடம்பையுடையவனாகிய அடியேன்,