பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 39

 

திருவேங்கடம்

8

கறுத்ததலை வெளிறு மிகுந்து
      மதர்த்தஇணை விழிகள் குழிந்து
      கதுப்பிலுறு தசைகள் வரண்டு           செவிதோலாய்க்
கழுத்தடியு மடைய வளைந்து
      கனத்தநெடு முதுகு குனிந்து
      கதுப்புறுப லடைய விழுந்து                தடுநீர்சோர்
உறக்கம்வரு மளவி லெலும்பு
      குலுக்கிவிடு மிருமல் தொடங்கி
      உரத்தகன குரலு நெரிந்து                   தடிகாலாய்
உரைத்தநடை தளரு முடம்பு
      பழுத்திடுமுன் மிகவும் விரும்பி
      உனக்கடிமை படும வர்தொண்டு             புரிவேனோ
சிறுத்தசெலு வதனு ளிருந்து
      பெருத்ததிரை யுததி சுரந்து
      செறித்தமறை கொணர நிவந்த               ஜெயமாலே
செறித்தவளை கடலில் வரம்பு
      புதுக்கியிளை யவனொ டறிந்து
      செயிர்த்தஅநு மனையு முகந்து                படையோடி
மறப்புரிசை வளையு மிலங்கை
      யரக்கனொரு பதுமுடி சிந்த
      வளைத்தசிலை விஜயமு குந்தன்              மருகோனே
மலர்க்கமல வடிவுள செங்கை
      அயிற்குமர குகை வழிவந்த
      மலைச்சிகர வடமலை நின்ற                 பெருமாளே.

பதவுரை

சிறுத்த செலு அதனுள் இருந்து=சிறிய மீன் சிறையில் மீனுருவங் கொண்டு, பெருத்த திரை உததி கரந்து செறித்த=பெரிய அலைகளுடன் கூடிய கடலின்கண் ஒளித்து வைத்த, மறை கொணர நிவந்த=வேதங்களைக் கொணரும் பொருட்டுத் தோன்றிய, ஜெயமால்=வெற்றியையுடைய