நல்வழியைத் தரிக்காத ஆறு சமயங்களின், ஒற்றுமைப்படாத பல பொருள்களையுடைய வழியில் செல்பவர்களான, வல்லரக்கர் போன்ற மூர்க்கர்களின் கல்விக் கலகத்துள் அழியலாமோ? விரிவுரை வெல்விக் குவீக்கு:- குவிக்கும் என்ற சொல் சந்தத்தையொட்டி குவீக்கும் என வந்தது. மன்மதன் முல்லைக் கணைகளையேவி உலகில் உள்ள மாந்தர்களை மயக்கிக் குவிக்கின்றான். முல்லைக்கை:- அப்படி வென்று குவிக்கின்ற கணையாகிய முல்லை மலரை ஏந்திய கையையுடையவன் மன்மதன். வீக்கு வில்லிக்கதக் கருது வேள்:- வீக்கு-நாண்பூட்டிய. சுரும்பு நாண் பூட்டிய வில்லாகக் கரும்பு விலை விரும்பிக் கொண்ட மன்மதன். வில்லற்ற வாக்கொள் சொல்லற்றுகா:- வில் அற்று அவா கொள் சொல் அற்று உகா. வில்-ஒளி. மன்மதனால் அறிவு ஒளி அற்றுப்போகும். ஆசை கொண்டு உரைக்கும் சொல்லும் அற்றுப் போகும். உகுதல்-சிந்துதல். மனம் நெகிழ்ந்து சிந்தும். பொய்யில்லத்துறா கவலைமேவு:- பொய் வாழ்வு-நிலையற்ற வாழ்வு. நிலையில்லாத வாழ்வுடைய வீட்டில் இருந்து சதா கவலையை யடைந்து மனிதர் மாய்கின்றார்கள். பல்லத்தி வாய்க்க:- அத்தி-கடல். பலவகையான துன்பக் கடல். “பல துன்பமு ழன்று கலங்கிய சிறிய புலையன் கொலையன்புரி பவ மின்று கழிந்திட வந்தருள் புரிவாயே” -(கனகந்திரள்) திருப்புகழ். |