பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 393

 

வல்லைக்கு மேற்றர்:-

வல்-வலிமை. ஐ அழகு ஏறு-இடபம்.

வலிமையும் அழகும் உடைய இடபத்தை வாகனமாக உடையவர் சிவபெருமான்.

உலகமெலாம் ஒடுங்கியபோது தருமம் இடப வடிவாகச் சென்று சிவமூர்த்தியை யடைந்தது. இறைவன் அதனை ஊர்தியாகக் கொண்டார். உலகத்தை எல்லாம் தாங்குகின்ற இறைவனையுந் தாங்குகின்ற வலிமையுடையது தருமமாகிய இடபம்.

கோயிலில் இறைவனுக்கு அண்மையில் உள்ள இடபம் தரும விடை வெளிப் பிரகாரத்தில் பெரிதாகவுள்ளது மால் விடை.

திரிபுர சம்மார காலத்தில்திருமால் விடையாகச் சென்று இறைவனைச் சுமந்தார்.

       கடகரியும் பரமாவுந் தேருமுகந் தேறாதே
       இடபமுகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
       தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
      இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.                                                         -திருவாசகம்.

தில்லைக்குமேற்றர் வல்லிக்கு மேற்றர்:-

ஏற்றர்-ஏற்றவர்.

தில்லையாகிய சிதம்பரத்துக்கும், சிவகாமவல்லிக்கும் ஏற்றவர் சிவபெருமான்.

தில்லையென்ற செடிகள் மிகுந்திருந்த காரணத்தால் அத்தலம் தில்லையெனப் பெற்றது.

கருத்துரை

வள்ளி மணவாளரே! சமயக் கலகத்து சென்று தடுமாறாவண்ணம் அடியேனை ஆண்டருள்வீர்.

84

  ககனமு மனிலமு மனல்புனல் நிலமமை
                கள்ளப் புலாற்கி                                ருமிவீடு
           கனலெழ மொழிதரு சினமென மதமிகு
                கள்வைத்த தோற்பை                        சுமவாதே