யுகஇறு திகளிலு மிறிதலு லொருபொருள் உள்ளக்க ணோக்கு மறிவூறி ஒளிதிக ழுருவுரு வெனுமறை யிறுதியி லுள்ளத்தை நோக்க அருள்வாயே ம்ருகமத பரிமளவிகசித நளினநள் வெள்ளைப் பிராட்டி இறைகாணா விடதர குடிலச டிலமிசை வெகுமுக வெள்ளத்தை யேற்ற பதிவாழ்வே வகுளமு முகுளித வழைகளு மலிபுன வள்ளிக் குலாத்தி கிரிவாழும் வனசரர் மரபினில் வருமொரு மரகத வள்ளிக்கு வாய்த்த பெருமாளே. பதவுரை ம்ருகமத பரிமள=கஸ்தூரி மணங்கமழ்வதும், விகசித=நன்கு மலர்ந்து விளங்குவதுமாகிய, நளினநள்=தாமரை மலரில் வீற்றிருக்கும், வெள்ளை பிராட்டி= வெண்ணிறத்துடன் கூடிய கலைமகளாருடைய, இறைகாணா=கணவனாகிய பிரமதேவனால் காணமாட்டாதவரும், விடதர=ஆலால விடத்தைக் கண்டத்தில் தரித்தவரும், குடில சடில மிசை=வளைந்த சடை முடியின் மீது, வெகுமுக=அநேக முகங்களை யுடைய, வெள்ளத்தை ஏற்ற=கங்கா நதியை ஏற்றுக்கொண்டவரும் ஆகிய, பதி வாழ்வே=சிவபெருமானுடைய திருக்குமாரரே! வகுளமும்=மகிழமரமும், முகுளித வழைகளும்=குவிந்துள்ள அரும்புகளோடு கூடிய சுரபுன்னையும், மலிபுன=மிகுந்துள்ள கொல்லைகளையுடைய, வள்ளி குலா=வள்ளிக்கொடிகள் மிகுதியாக விளங்குகின்ற, திகிரி வாழும்=(வள்ளி) மலையில் வாழ்கின்றவரும், வனசரர் மரபினில் வரும்=காட்டில் சஞ்சரிக்கும் வேடர்குலத்தில் தோன்றினவரும், ஒரு மரகத=ஒப்பற்ற மரகத நிறமுடையவருமாகிய, வள்ளி வாய்த்த பெருமாளே=வள்ளி யம்மையாருக்குக் கணவராக வாய்த்த பெருமையின் மிக்கவரே! ககனமும்=வானும், அனிலமும்=காற்றும், அனல்=நெருப்பும், புனல்=நீரும், நிலம் அமை=மண்ணும் ஆகிய ஐம்பூதங்களினாலாய, கள்ள புலால்=கரவுடைய துர் நாற்றம் வீசுவதும், க்ருமி வீடு=புழுக்களுக்கு வீடு போன்றதும், கனல் எழ மொழிதரு=நெருப்புப் பொறி பறக்குமாறு பேசுகின்ற, சினம் என மதம் மிகு=கோபம் என்கின்ற அகங்கார மிகுந்த, கள்வைத்த தோல்பை=மயக்கம் என்ற கள்ளை வைத்துள்ள தோற்பை போன்றதுமாகிய இவ்வுடம்பை, சுமவாதே=சுமந்து அயராமல், யுக இறுதிகளிலும் இறுதியில்=யுகாந்தங்களிலும் முடிவில்லாததும், ஒரு பொருள்=ஒப்பற்ற பரம்பொருளும், ஒளிதிகழ் அரு உரு எனும்=ஞான வொளிவீச அருவாகவும் உருவாகவும் விளங்குவதென்று கூறும், மறை இறுதியின் உள்ளத்தை= வேதமுடிவில் விளங்குவதும் ஆகிய தேவரீரை, உள்ளக்கண் |