சொல்லுமர விந்த வல்லிதனி நின்று தொல்லைவினை யென்று முனியாதே துய்யவரி வண்டு செய்யுமது வுண்டு துள்ளியக டம்பு தரவேணும் கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த கல்விகரை கண்ட புலவோனே கல்லொழுகு கொன்றை வள்ளல்தொழ கல்லலற வொன்றை யருள்வோனே வல்லகர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச வல்லமைதெ ரிந்த மயில்வீரா வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே. பதவுரை கல் அசல மங்கை எல்லையில் விரிந்த=கற்களின் மயமான மலையரையன் மகளாகிய பார்வதியம்மை வரையில் சென்று நின்ற, கல்வி கரை கண்ட=கல்வியின் கரையைக் கண்ட, புலவோனே=புலவர் பெருமானே! கள் ஒழுகு=தேன் ஒழுகும், கொன்றை=கொன்றை மலரைப் புனைந்த, வள்ளல் தொழ=வள்ளலாகிய சிவபெருமான் வணங்க, அன்று=அந்நாளில், கல்லல் அற=குழப்பம் நீங்குமாறு, ஒன்றை அருள்வோனே=ஒரு மொழியாம் பிரணவப் பொருளை உபதேசித்தவரே! வல் அசுரர் அஞ்ச=வலிமையான அசுரர்கள் அஞ்சவும், நல்லசுரர் விஞ்ச=நற்குணமுடைய தேவர்கள் பிழைக்குமாறும், வல்லமை தெரிந்த=உமது ஆற்றலைக் காட்டிய, மயில் வீரா=மயில் வீரரே! வள்ளி படர்கின்ற=வள்ளிக் கொடி படர்கின்ற, வள்ளி மலை சென்று= வள்ளிமலையிற் சென்று, வள்ளியை மணந்த=வள்ளிபிராட்டியாரை மணஞ்செய்து கொண்ட, பெருமாளே=பெருமையின் மிகுந்தவரே, அல் அசல் அடைந்த=இரவில் அயலில் வந்து, வில் அடல் அநங்கன்=வில்லையேந்தி வலிமையான மன்மதன், அல்லி மலர் அம்பு தனை ஏவ=தாமரை மலர்க் கணையைச் செலுத்த, பிள்ளை மதி=பிறைச் சந்திரனும், தென்றல்=தென்றல் காற்றும், அள்ளி எரி சிந்த=நெருப்பை அள்ளி வீச, ஐயம் உதுகிண்ட=தலைவன் அருள் புரிவானோ என்ற ஐயப்பாடு வந்து கலக்கத்தைச் செய்ய, அணை ஊடு=படுக்கையில், சொல்லும்=மாதர்கள் சொல்லும் அலர் உரையால் சொல்லப்படுகின்ற, அரவிந்த வல்லி=தாமரை மலரில் வாழ்கின்ற இலக்குமி போன்ற இந்தப் பெண், தனி நின்று=தனிமையாகக் கிடந்து, தொல்லை வினை என்று முனியாதே= என் பழவினையால் வருந்துகின்றேன் என்று கூறித் தன்னைத் தானே வெறுக்காமல், துய்யவரி வண்டு=தூயரேகை களையுடைய வண்டுகள், செய்ய மது உண்டு=சிவந்த தேனையுண்டு, துள்ளிய கடம்பு=தேனுண்ட மயக்கத்தில் துள்ளுகின்ற கடப்ப மலர் மாலையை, தரவேணும்=தந்தருள வேண்டும். |