பக்கம் எண் :


40 திருப்புகழ் விரிவுரை

 

திருமாலும், ஏ செறித்து=கனையைச்செலுத்தி, அவளை கடலில் வரம்பு புதுக்கி=அந்த வளைந்த சமுத்திரத்தில் அணையைப் புதுக்கி, இளையவனோடு=இலக்குவனோடு, அறிந்து செயிர்த்த=இராவணன் உடைய நிலையை அறிந்து சீறிய, அநுமனையும் உகந்து=அநுமனுடன் மகிழ்ந்து, படை ஓடி=படையைச் செலுத்தி, மரப்புரிசை வளையும் இலங்கை=வீரம் பொருந்திய மதில்கள் சூழ்ந்துள்ள இலங்கையில் வாழ்ந்த, அரக்கன்= இராவணனுடைய, ஒருபது முடி சிந்த=பத்துத் தலைகளும் அற்று விழுமாறு, சிலை வளைத்த=வில்லை வளைத்த, விஜயமுகுந்தன்=சிறந்த வெற்றியுடையவரும் ஆகிய முகுந்தனுடைய, மருகோனே=திருமருகரே! மலர்க்கமல வடிவு உள செம் கை=தாமரை மலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கரத்தில், அயில் குமர=வேல் ஏந்திய குமாரக் கடவுளே! குகை வழி வந்த=குகை வழியே வந்து, மலை சிகர வடமலை நின்ற= மலையாகிய சிகரங்களையுடைய திருவேங்கட மலையில் நிற்கும், பெருமாளே= பெருமையில் மிகுந்தவரே! கறுத்த தலை வெளிறு மிகுந்து=கறுத்த மயிருடன் இருந்த தலை வெண்மை நிறத்தை மிகுதியாக அடைந்து, மதர்த்த இணைவிழிகள் குழிந்து= செழித்த இரு கண்களும் குழிவிழுந்து ஒடுங்கி, கதுப்பில் உறு தசைகள் வறண்டு= கன்னங்களில் இருந்த சதைகள் வற்றி, செவி தோலாய்=காதுகள் தோலாய் மெலிய, கழுத்து அடியும் அடிய வளைந்து=கழுத்தின் அடிப்பாகம் முழுதும் வளைந்து, கனத்த நெடு முதுகு குனிந்து=பருத்திருந்த நீண்ட முதுகு குனிந்து குறுக, கதுப்பு உறு பல் அடைய விழுந்து=தாடையில் இருந்த பல் யாவும் விழுந்து ஒழிய, உதடு நீர் சோர்= உதடுகளில் சொள்ளு ஒழுக, உறக்கம் வரும் அளவில்=தூக்கம் வரும் சமயத்தில், எலும்புகுலுக்கி விடும் இருமல் தொடங்கி=எலும்புகளைக் குலுக்கித் தள்ளும்படி இருமல் வரவும், உரத்தக் கன குரலும் நெரிந்து=வலிமையும் உறுதியும் கொண்ட குரல் நெரிபட்டு அடங்க, தடிகாலாய்=கைத்தடி கால் போல் உதவ, உரத்த நடை தளரும்=உரம் உள்ள நடை தளர்ந்து போகும், உடம்பு பழுத்திடுமுன்=இந்த உடம்பு முதுமை யடைவதற்குமுன், மிகவும் விரும்பி=மிகுந்து அன்பு வைத்து, உனக்கு அடிமைபடும் அவர் தொண்டு புரிவேனோ=தேவரீருக்கு அடிமை பூண்டுள்ள தொண்டர்களுக்கு அடியேன் தொண்டு புரியமாட்டேனோ?

பொழிப்புரை

சோகுகன் என்ற அரக்கன், பெரிய அலைகள் வீசுகின்ற கடலில் வேதங்களை மறைத்து வைத்தபோது, மீன் உருவங்கொண்டு, அவ்வேதங்களைக் கொணர்ந்தவரும், வெற்றியுடைய திருமாலும், கடலின்மீது கணை தொடுத்து, அணைகட்டி, இலக்குமணனோடு இருந்து, இராவணனது தன்மையை அறிந்து, சீற்றமடைந்த அநுமனை மகிழ்ந்து, படைகளைச் செலுத்தி, வீரம் பொருந்திய மதில்கள் சூழ்ந்த இலங்கையில் வாழ்ந்த இராவணனுடைய பத்துத் தலைகளும் அற்று விழும்படி, கோதண்டத்தை வளைத்த, சிறந்த வெற்றி படைத்தவரும் ஆகிய நாராயண