பக்கம் எண் :


404 திருப்புகழ் விரிவுரை

 

      இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
                னிருதாட்கள் தம்மை                      யுணர்வேனோ
வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
                மயில்மேற்றி கழ்ந்த                                குமரேசா
           வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
                மலைகாத்த நல்ல                          மணவாளா
அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
                யருள் போற்றும் வண்மை                 தரும்வாழ்வே
           அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
                அடியார்க்கு நல்ல                            பெருமாளே.

பதவுரை

வடநாட்டில்=வடநாட்டில் உள்ள, வெள்ளிமலை காத்து=வெள்ளி மலையைக் காத்து, புள்ளி மயில் மேல் திகழ்ந்த=புள்ளியை யுடைய மயில் மீது விளங்குகின்ற, குமரேசா= குமாரக் கடவுளே! வடிவு ஆட்டி=அழகு நிறைந்த பெண்மணியாகிய, வள்ளி அடி போற்றி=வள்ளி பிராட்டியின் திருவடியைப் புகழ்ந்து, வள்ளி மலை காத்த=வள்ளி மலையில் அப்பிராட்டியின் சமயம் பார்த்துக் காத்திருந்த, நல்ல மணவாளா=நல்ல நாயகரே! அடி நாள்கள் செய்த=முன் நாள்களில் அடியேன் செய்த, பிழை நீக்கி=குற்றங்களைப் பொருத்துக் களைந்து, என்னை அருள் போற்றும் வண்மை தரும்= எனக்கு உமது திருவருளைப் போற்றும் வளப்பமான குணத்தைத் தந்தருளிய, வாழ்வே= என் செல்வமே! அடி போற்றி=உமது திருவடியைப் போற்றி, அல்லி முடி சூட்டவல்ல= தாமரை மலரை உமது முடியில் சூட்டவல்ல, அடியார்க்கு நல்ல=அடியார்களுக்கு நல்லவராக விளங்கும், பெருமாளே=பெருமையில் மிகுந்தவரே! குடி வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, அன்னை=தாய், மனையாட்டி=மனைவி, பிள்ளை=பிள்ளை, குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள்=குயில் போலப் பேசி எதிர்ப்படும் மொழியையுடைய பெண்கள், குலம்=குலம், வாய்த்த நல்ல தனம்=கிடைத்துள்ள நல்ல செல்வம், வாய்த்தது என்ன= இவை யெல்லாம் நமக்கு வாய்த்தது என்று ஆணவங்கொண்டு, குரு வார்த்தை தன்னை உணராதே=குருவின் உபதேச மொழிகளை உணர்ந்து அறியாமல், நாள்கள் இட=வாழ்நாளைக் கழிக்க, வெய்யநமன் நீட்டி=கொடிய இயமன் நெருங்கி வந்து, தொய்ய இடர் கூட்ட=தளர்வுறும்படித் துன்பங்களைத் தர, இன்னல் கொடு போகி=துயரத்துடன் கொண்டு போய், இடு காட்டில்=சுடுகாட்டில், என்னை எரி ஊட்டு முன்=அடியேனை எரிப்பதற்கு முன்பாக, உன் இரு தாள்கள் தம்மை=உமது இரு திருவடிகளை, உணர்வேனோ=உணர்ந்து அறியேனோ?