பக்கம் எண் :


410 திருப்புகழ் விரிவுரை

 

வேட்டியில் மெல்ல மெல்லத் தூசு படிவதுபோல் வினை பையப் பையஏறி விடுகிறது.

       “தூளேறு தூசு போல் வினையேறு மெய்யெனுந்
           தொக்கினுட் சிக்கி நாளும்
      டழலேறு காற்றினிடை அழலேறுபஞ் செனச்
           சூறையிட்டறிவை எல்லாம்
      நாளேற நாளேற வார்த்திக மெனுங் கூற்றின்
           நட்பேற வுள்ளுடைந்து
      நயனங்கள் அற்றதோர் ஊரேறு போலவே
           நானிலந் தனில் அலையவோ”           -தாயுமானார்.

நன்றிய லொன்றி:-

நல்ல செயல்களில் பொருந்தி.

நற்செயல்களாவன, ஆலய வழிபாடு, ஜெபம், தியானம், பாராயணம், தவம் முதலியனவாம்.

நின்பதம் வினையென்று அன்புதந் தருள்வாயே:-

வினா-என்ற சொல் வின் எனக் குறுகியது. திருவடியின் பெருமையைக் கற்றார் வாயிலாகக் கேட்டு திருவடிக் கன்பு செய்யவேண்டும்.

திருவடியைப் பற்றியே அருணகிரிநாதர் பாடிய சீர்பாத வகுப்பை அன்பர்கள் தினந்தோறும் பாராயணம் புரிதல் வேண்டும்.

அரவின் கண் முன் துயின்று:-

ஆதிசேடன் வெள்ளைப் பாம்பு. அடு சுழுமுனை என்ற நாடி. சுழுமுனையில் பிராணவாயுவைச் செலுத்தி யோகிகள் தூங்காமல் தூங்குவர். இது அறிதுயில்.     

உலகம் உய்யத் திருமால் யோகநித்திரை செய்கின்றார்.

மந்தி சந்துடனாடும்வரை:-

சந்து-சந்தனம். குரங்குகள் சந்தன மரங்களில் விளையாடுகின்ற மலை வள்ளிமலை.

“சந்தனாடவியினும் உறை குறமகள்” -(கொந்துவார்) திருப்புகழ்.