பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 411

 

“மட்டொழுகு சாரமதுரித்த தேனைப் பருக
மர்க்கட சமூக மமை தொட்டிறாலெட்டுவரை” -பூதவேதாள வகுப்பு.

கருத்துரை

வள்ளிமலை நாதனே! உடம்பு அழியுமுன் உமது திருவடியைத் தந்தருள்வீர்.

88

      வரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சன
                விழியையு கந்தமு கந்து கொண்டடி
                வருடிநி தம்பம ளைந்து தெந்தென        அளிகாடை
           மயில்குயி லன்றிலெ னும்பு ளின்பல
                குரல்செய்தி ருந்துபி னுந்தி யென்கிற
                மடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல்        மெழுகாகி
      உருகியு கந்திதழ் தின்று மென்றுகை
                யடியின கங்கள்வ ரைந்து குங்கும
                உபய தனங்கள்த தும்ப அன்புட        னணையாமஞ்
           சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழ
                அமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிட
                உணர்வழி யின்பம றந்து நின்றனை    நினைவேனோ
      விரவி நெருங்குகு ரங்கி னங்கொடு
                மொகுமொகெ னுங்கட லுங்க டந்துறு
                விசைகொடி லங்கைபு குந்த ருந்தவர்         களிகூர
           வெயில்நில வும்பரு மிம்ப ரும்படி
                ஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கணை
                விறல்நிரு தன்தலை சிந்தி னந்திரு       மருகோனே
      அருகர் கணங்கள்பி ணங்கி டும்படி
                மதுரையில் வெண்பொடி யும்ப ரந்திட
                அரகர சங்கர வென்று வென்றருள்        புகழ்வேலா
           அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலை
                வயல்கள் பொருந்திய சந்த வண்கரை
                யரிவை விலங்கலில் வந்து கந்தருள்   பெருமாளே.

பதவுரை

விரவி நெருங்கு=தன்னுடன் கலந்து கூடி நெருங்கி வந்த, குரங்கு இனங்கொடு= குரங்கின் கூட்டத்துடன் சென்று, மொகு மொகு எனும் கடலும் கடந்து=மொகு மொகு என்று ஒலிக்கின்ற கடலைக் கடந்து