சென்று, உறு விசை கொடு=பொருந்திய வேகத்தோடு, இலங்கை புகுந்து=இலங்கைக்குள் நுழைந்து, அரும்தவர் களிகூர=அருமையான தவமுனிவர்கள் மகிழ்ச்சி மிகுதியாக அடையும்படி, வெயில் நிலவு உம்பரும்=ஒளி பொருந்திய தேவர்களும், இம்பரும்=இந்த மண்ணுலகத்தோரும், படி=பூமியில், ஜெய ஜெய என்று=வெற்றி பெறுக வெற்றி பெறுக என்று ஒலிக்க, விடும் கொடும் கணை=விடுத்த கொடிய அம்பினால், விறல் நிருதன் தலை சிந்தினன்=வீரமுள்ள இராவணனுடைய தலைகளை அறுத்துத் தள்ளிய இராமருடைய, திருமருகோனே=திருமருகரே! அருகர் கணங்கள்=சமணருடைய கூட்டமானது, பிணங்கிடும்படி=மாறுபட்டு நிற்குமாறும், மதுரையில்=மதுரைமா நகரில், வெண் பொடியும் பரந்திட=திருநீறு பரவவும், அர அர சங்கர என்று=ஹரஹர சங்கரா என்று யாவரும் கூறவும், வென்று அருள்=வெற்றி பெற்றருளிய, புகழ் வேலா=புகழ் பெற்ற வேலவரே! அறம் வளர் சுந்தரி=அரத்தை வளர்த்த அழகியாகிய பார்வதி தேவியின், மைந்த=குமாரரே! தண்டலை=குளிர்ந்த சோலைகளும், வயல்கள் பொருந்திய=வயல்களும் பொருந்திய, சந்த வண்கரை=அழகிய வளப்பமான நீர்க்கரைகளுள்ள, அரிவை விலங்கலில்=வள்ளிமலையில், வந்து உகந்து அருள்=வந்து மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும், பெருமாளே=பெருமையில் சிறந்தவரே! வரைவில் பொய் மங்கையர் தங்கள்=பொய்மை மிகுந்த பொது மாதர்கள், அஞ்சன விழியை உகந்தும்=மையிட்ட கண்களில் மகிழ்ந்தும், முகந்து கொண்டு=அந்த இன்பத்தைப் பருகியும், அடி வருடி=அவர்களுடைய காலைத் தடவியும், நிதம்பம் அளைந்து= அல்குலை அனுபவித்தும், தெந்தென அளி=தெந்தென என்று ஒலிக்கும் வண்டு, காடை= காடை யென்ற பறவை, மயில்=மயில், குயில்=குயில், அன்றில் எனும் புளின்=அன்றில் என்ற பறவைகளின், பல குரல் செய்து இருந்து=பல ஒலிகளை எழுப்பியிருந்து, பின் உந்தி என்கிற மடுவில் விழுந்து கிடந்து=பின்னர் கொப்பூழ் என்ற மடுவில் விழுந்து கிடந்தும், செம் தழல் மெழுகு ஆகி=சிவந்த நெருப்பில் பட்ட மெழுகு போல் ஆகி, உருகி=உள்ளம் உருகியும், உகந்து=மகிழ்ச்சியடைந்தும், இதழ் தின்று மென்று= வாயிதழைத் தின்றும் மென்றும், கை அடியின் நகங்கள் வரைந்து=கையின் அடியில் உள்ள நகங்களால் குறியிட்டும், குங்கும உபயதனங்கள் ததும்ப=குங்குமம் பூசப் பெற்ற இரு தனங்கள் பூரித்து அசைய, அன்புடன் அணையா=அன்போடு தழுவியும், மஞ்சு உலாவிய கொண்டை குலைந்து எழ=அழகு உலவிய கொண்டை அவிழ்ந்து அலைச்சல் அடைய, அமளியில்=படுக்கையில், மின் சொல் மருங்கு இலங்கிட=மின்னல் என்று சொல்லத் தக்க மெல்லிய இடை விளக்கந்தர, உணர்வு அழி இன்பம் மறந்து= நல்லுணர்வை யழிக்கின்ற அந்த இன்பத்தை மறந்து, நின்றனை நினைவேனோ= தேவரீரை நினைக்க மாட்டேனோ? பொழிப்புரை தன்னுடன் கலந்து கூடி நெருங்கி வந்த குரங்குகளின் கூட்டத்துடன் சென்று, மொகுமொகு என்று முழங்குகின்ற கடலைக் கடந்து வேகமாக இலங்கையுள் நுழைந்து, அருமை |