யான தவஞ் செய்யும் முனிவர் மிகுந்த மகிழ்ச்சி யடையுமாறு ஒளிமிகுந்த தேவரும் பூவுலக வாசிகளும், இம்மண்ணுலகில் ஜெய ஜெய என்று ஒலி செய்ய, கொடிய கணையை விடுத்து, வீரமுடைய இராவணனுடைய தலைகளை அறுத்த இராமருடைய திருமகரே! சமணருடைய கூட்டம் மாறுபட்டுக் கலங்கி நிற்கவும், மதுரையம்பதியில் திருநீறு பரவுமாறும், ஹர ஹர சங்கரா என்று எங்கும் ஒலிக்கவும் வென்றருளிய புகழ்மிக்க வேலவரே! அறம் வளர்த்த அழகியாம் பார்வதியின் பாலகரே! சோலையும் வயல்களும் பொருந்திய, அழகிய வளமையான கரைகளுடன் கூடிய வள்ளி மலையின் கண் வந்து மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமிதம் உடையவரே! பொய் மிகுந்த பொது மாதர்களின் மை தீட்டிய கண்களில் மகிழ்ந்தும், அந்த இன்பத்தைப் பருகியும், அவர்கள் பாதத்தைப் பிடித்துத் தடவியும் அல்குலை அநுபவித்தும், தெந்தென என்று ஒலிக்கும் வண்டு, காடை, மயில், குயில், அன்றில் என்ற பறவைகளின் பலவிதமான குரல்களை எழுப்பியிருந்தும் கொப்பூழ் என்ற மடுவில் விழுந்து கிடந்தும், சிவந்த அழலில் பட்ட மெழுகு போல் உள்ளம் உருகியும், களிப்புற்றும், வாய் இதழைத் தின்றும் மென்றும், கையில் உள்ள நகங்களால் குறி வைத்தும், குங்குமம் பூசிய இரு தனங்கள் பூரித்துக் குலுங்க அன்புடன் தழுவி, அழகு உலவிய கூந்தல் அவிழ்ந்து கலைந்திட படுக்கையில் மின்னலைப் போன்ற இடை விளங்க நல்லுணர்வை யழிக்கின்ற அக்கலவியின்பத்தை மறந்து தேவரீரை நினைக்க மாட்டேனோ? விரிவுரை இத் திருப்புகழில் நான்கு அடிகளிற் பொது மகளிரின் தன்மைகளைச் சுவாமிகள் கூறுகின்றார்கள். வரைவில் பொய் மங்கையர்:- விலை கொடுப்பார் யாவர்க்கும் தம் நிலத்தை விற்பதல்லது, அதற்கு ஆவார் ஆகாதார் என்னும் வரைவு இலாத மகளிர் வரைவின் மகளிர். இன்ப மறந்து நின்றனை நினைவேனோ:- இறைவனை நினைப்பற நினைக்க வேண்டும். இறைவனை நினைந்தால் ஏனைய நினைவுகள் தாமே விலகும். உம்பருமிம்பரும்:- உம்பர்-தேவர்கள்; இம்பர்-மனிதர்கள். |