“உம்பரு மிம்பரு முய்யவன்று போனக மாகநஞ் சுண்டல் பாடிப் பொற்றிருச் சுண்ணம் இடித்து நாமே” -திருவாசகம். அறம் வளர் சுந்தரி:- காஞ்சீபுரத்தில் காமாட்சியம்மை முப்பத்திரண்டு அறங்களைச் செய்தருளினார். அதனால் அம்பிகை அறம் வளர்த்த நாயகி. அரிவை விலங்கல்:- அரிவை விலங்கல்-வள்ளிமலை. கருத்துரை வள்ளிமலை மேவும் இறைவனே! உன்னை நினைக்க அருள் புரிவாய். திருக்கழுக்குன்றம் இத்தலம் செங்கற்பட்டு புகைவண்டி நிலையத்துக்குத் தென் கிழக்கு 9 மைல். பஸ் வசதியுண்டு. நால்வர் பாடலும் பெற்றது. இது கதலிவனம், வேதகிரி, பட்சிதீர்த்தம் எனவும் வழங்கும். வேதங்களும் கழுகுகளும் வழிபட்ட தலம். இங்கு பட்சி தரிசனம் சிறந்தது. அந்தகக் கவி வீரராகவ முதலியார் பாடிய தலபுராணம் உண்டு. சங்கு தீர்த்தம் மிகச் சிறந்த மகிமை யுடையது. பன்னிரு ஆண்டுக்கு ஒருமுறை சங்கு பிறக்கின்றது. பன்னிரு ஆண்டுகட்கு ஒருமுறை இன்றும் இடி அபிஷேகம் நடைபெறுகின்றது என்பர். வேதம் பூசித்தபடியால் உயர்ந்த தெய்வீகம் உடையது. சுவாமி பெயர் தேவகிரீச்சுரர். தேவியார் பெயர் பெண்ணின் நல்லாளம்மை. அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின் அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு கணையாலே அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர் நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ சிலநாள்போய் இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன் மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை முதிர்வாயே |