பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 415

 

           எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன்
                மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன
                திருக்கு நற்றொண் டர்க்கிணையாகவு  னருள்தாராய்
      புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி
                படச்சி ரித்தண் முப்புர நீறுசெய்
                புகைக்க னற்கண் பெற்றவர் காதலி       யருள்பாலா
           புலிக்குள் யுத்தம் புத்திரர் சேயர
                சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை
                புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன்       மருகோனே
      திகழ்க டப்பம் புட்பம தார்புய
                மறைந்து ருக்கொண் டற்புத மாகிய
                தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை யணைசீலா
           செகத்தி லுச்சம் பெற்றம ராவதி
                யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி
                திருக்க ழுக்குன் றத்தினில் மேவிய       பெருமாளே.

பதவுரை

புகழ் சிலை கந்தர்ப்பனும்=புகழ் பெற்ற கரும்பு வில்லையேந்திய மன்மதனும், பொடிபட சிரித்து=பொடிபட்டு எரிந்து போகவுஞ் சிரித்து, அண் முப்புரம் நீறுசெய்= அணுகிவந்த முப்புரங்கள் சாம்பலாகவும், புகை கனல் கண்பெற்றவர்=புகை நெருப்பைத் தந்த கண்ணனைக் கொண்ட சிவபெருமானுடைய, காதலி அருள் பாலா=காதலியாகிய பார்வதி தேவியின் பாலகரே! புவிக்கு உள் யுத்தம்=பூமியில் போர் வரவும், புத்திரர்= புதல்வர்கள், சேய்=பிள்ளைகள், அரசு அனைத்தும் முற்றும்=அரசர்கள் அனைவரும், செற்றிடவே பகை புகட்டி வைக்கும்=ஒருவரையொருவர் கொல்லும்படி பகையை மூட்டி வைத்த, சக்கிர பாணிதன்=சக்கராயுதத்தை ஏந்திய கையராகிய திருமாலின், மருகோனே= மருகரே! திகழ் கடப்பம் புட்படம் அது ஆர்புய=விளங்குகின்ற கடபமலர் மாலை நிறைந்த புயங்களை மறைத்து, உரு கொண்டு=வேறு வடிவத்தைக் கொண்டு, அற்புதம் ஆகிய தினைப்புனத்தில்=அற்புதமான தினைப்புனத்தில், இன்பு உற்று உறை= இன்பத்துடன் வாழ்ந்த, பாவையை அணை சீலா=வள்ளிபிராட்டியை மருவிய சீலரே! செகத்தில் உச்சம் பெற்று=பூதலத்தில் மேலான சிறப்பைப் பெற்று, அமராவதி அதற்கு ஒப்பு என்று உற்று=இந்திரனுடைய நகராகிய அமராவதிக்கு நிகர் இவ்வூர் என்று விளங்கி, அழகே செறி=அழகு நிறைந்துள்ள, திருக்கழுக்குன்றத்தினில் மேவிய= திருக்கழுக்குன்றத்தினில் வீற்றிருக்கும், பெருமாளே=பெருமையின் மிகுந்தவரே! அகத்தினை கொண்டு=அகங்காரத்தைக் கொண்டு, இப்புவி மேல்=இந்தப் பூதலத்தில், சில தினத்து=சில நாள்கள், மற்று ஒன்று அறியாது=வேறு ஒரு நன்மார்க்கத்திலும் பொருந்த அறியாமல், பின் அவத்து உள் வைக்கும்=