பின் பயனிலாத தன்மையில் வைக்கின்ற, சித்தசனார் அடுகணையாலே=மன்மதன் செலுத்தி வருத்துங் கணையினால், அசுத்த= தூய்மையில்லாததும், மை=மைபூசியதுமாகிய, கண் கொட்புஉறு பாவையர்=கண்கொண்டு சுழற்றும் பொது மாதர்கள், நகைத்து உரைக்கும்=சிரித்துப் பேசும், பொய் கடல் மூழ்கியே=பொய்யெனும் கடலில் அடியேன் மூழுகி, அலக்கணில் சென்று=துன்பத்தில்பட்டு, தடுமாறியெ=தடுமாற்றத்தை யடைந்து, சிலநாள் போய்=சில நாள் போக, இகத்தை மெய் கொண்டு=இம்மை வாழ்வே மெய்யென எண்ணி, இப்புவி=இந்தப் பூமியில், பாலர் பொன் மயக்கத்தில் உற்று=மக்கள் பொன் என்னும் மயக்கத்தில் அகப்பட்டு, அப்பற்றைவிடாது=அந்தப் பற்றினைவிடாமல், உடல் இளைப்பு=உடலில் இளைப்பு, இரைப்பும்=மூச்சு வாங்குதல், பித்தமும் ஆய்= பித்தம் இவைகள் மேலிட நரை முதிர்வு ஆய்=நரை வந்து கிழத்தனத்தையடைந்து, எம கயிற்றின் சிக்கல் நிலாமுன்=இயமனுடைய பாசக் கயிற்றின் சிக்கில் நிற்பதற்குமுன், மலர் பதத்தின்=தேவரீருடைய மலரடியில், பத்திவிடமானது இருக்கும்=அன்பு விடாத மனத்தையுடைய, நல்தொண்டர்க்கு இணை ஆகவும்=நல்தொண்டர்கட்கு அடியேன் சமமாகும்படி, உன் அருள் தாராய்=உமது திருவருளைத் தந்தருள்வீர். பொழிப்புரை புகழ்பெற்ற கரும்பு வில்லையுடைய மன்மதன் பொடிபட்டு எரியவும், அணுகி வந்த திரிபுரங்கள் சாம்பராகவும் சிரித்துப் புகை நெருப்பை ஏவிய நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானுடைய காதலியாகிய உமையம்மை பெற்ற புதல்வரே! பூமியில் போர் வந்து, புத்திரர், குழந்தைகள் மன்னர் அனைவரும் மாண்டொழிய பகையை மூட்டிய சக்ராயுதத்தை ஏந்திய கரத்தையுடைய திருமலின் மருகரே! விளங்குகின்ற கடப்ப மாலையுடைய புயத்தை மறைத்து மாறு வேடம் புனைந்து, அற்புதமாகிய தினைப்புனத்தில் இன்பமாக வாழ்ந்த வள்ளிநாயகியைத் தழுவிய சீலமுடையவரே! பூதலத்தில் சிரப்புடைய, அமராவதி நகருக்கு நிகராகி அழகு நிறைந்த திருக்கழுக்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமிதமுடையவரே! அகங்காரங்கொண்டு, இப்பூதலத்தில் சில நாள் வேறு ஒரு நல்வழியை மேற்கொள்ள அறியாது, வீணாக்கும் மன்மதனுடைய கணையினால், அசுத்தமும் மையும் உடைய கண்களைச் சுழற்றும் பொது மாதர்கள் சிரித்துப் பேசும் பொய் சமுத்திரத்தில் முழுகி, துன்பப்பட்டு, தடுமாறி சிலநாள் போக, இம்மை வாழ்வே மெய்யென்று எண்ணி மைந்தர் பொன் என்ற மயக்கத்தை யடைந்து, அந்த ஆசையை விடாது, இளைப்பு, மேல்மூச்சு, பித்தம், நரை முதலியவற்றை யடைந்து கிழவனாகி இயமனுடைய பாசக் கயிற்றில் அகப்பட்டு சாவதற்கு முன், உமது திருவடித் தாமரை |