நிலத்துக்கு நலஞ் செய்கின்றவர் கிருஷ்ணர். இது கிருஷ்ண என்ற சொல்லுக்குப் பொருள். செகத்தி லுச்சம் பெற்றமராவதி யதற்கு மொப்பென் றுற்றழகே செறி திருக்கழுக்குன்றம்:- சம்புகுத்தன் மாகுத்தன் என்ற இருவர் சகோதரர்கள். சம்புகுத்தன் சிவமே பரம்பொருள் என்பான். மாகுத்தன் சக்தியே பெரிய பொருள் என்பான். இந்த வழக்கு எங்குந் தீராது வேத மலையில் வந்து சிவமூர்த்தியிடம் வினவினார்கள். சிவபெருமான், “பொன்னும் அணிகலமும் போன்று சக்தியும் சிவமும் தாதான்மியம். வேறு வேறு பொருளன்று” என்று அருளிச் செய்தார். சிவமூர்த்தி கூறியும் அவர்கள் மனந்தெளியாது, மீண்டும் சிவமே பரம் என்றும், சக்தியே பரம் என்றும் வாதிட்டார்கள். அவர்களைக் கழுகுகளாகுமாறு சிவபெருமான் சபித்தருளினார். அக்கழுகுகள் பூசித்ததனால் கழுக்குன்றம் எனப் பெற்றது. கருத்துரை திருக்கழுக்குன்றமேவிய திருமுருகா! தொண்டருடன் கூடி வாழ அருள் செய்வீர். எழுகுநிறை நாபி அரிபிரமர் சொதி யிலகுமரன் மூவர் முதலானோர் இறைவியெனு மாதி பரைமுலையி னூறி யெழுமமிர்த நாறு கனிவாயா புழுகொழுகு காழி கவுணியரில் ஞான புனிதனென ஏடு தமிழாலே புனலிலெதி ரேற சமணர்கழு வேற பொருதகவி வீர குருநாதா மழுவுழைக பால டமருகதரி சூல மணிகரவி நோத ரருள்பாலா மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை வளமைபெற வேசெய் முருகோனே கழுகுதொழு வேத கிரிசிகிரி வீறு கதிருலவு வாசல் நிறைவானோர் கடலொலிய தான மறைதமிழர்க ளோது கதலிவன மேவு பெருமாளே. |