ஓல மிட்ட கரும்பு தனா தனாவென வேசி ரத்தில் விழுங்கை பளீர் பளீரென வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென விரகலீலை ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவென வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென அமுதமாரன் ஆல யத்து ளிருந்து குபீர் குபீரென வேகு திக்க வுடம்பு விரீர் விரீரென ஆர முத்த மணிந்து அளா வளாவென மருவுமாதர் ஆசை யிற்கை கலந்து சுமா சுமாபவ சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம் ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவென வகைவராதோ மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலென வேலெ ழுச்சி தரம்பல் வெளேல் வெளேலென வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலென எதிர்கொள்சூரன் மார்பு மொக்க நெரிந்து கரீல் சுரீலென பேய்கு திக்க நிணங்கள் குமூ குமூவென வாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோவென உதிரமாறாய் வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீலென மாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலென மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென விசைகள்கூற வேலெ டுத்து நடந்த திவா கராசல வேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ் வேத் வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ குமரவேளே பதவுரை மாலையிட்ட சிரங்கள்=பூமாலையை யணிந்து கொண்டுள்ள (சூராதியருடைய) தலைகள் செவேல் செவேல் என=உதிரக் கொதிப்பால் சிலந்த நிறத்தை யடையவும், வேல் எழுச்சி தரும்பல்=வேலைப்போல் கூர்மையாகவுள்ள பற்கள், வெளேல் வெளேல்என=(உதிரத்துடன் கூடிய புலாலுணவால் சிவந்த அப்பற்கள்) வெண்ணிறத்தை யடையவும், வாகை பெற்ற புயங்கள்=வெள்ளி மாலையைச் சூடியுள்ள தோள்கள், கறேல் கறேல் |