என=மிகுந்த கறுப்புநிறத்தையடையவும், எதிர் கொள் சூரன்=போரில் எதிர்த்த சூரபன்மனுடைய, மார்பும் ஒக்க நெரிந்து=ஏனைய உறுப்புகளுடன் மார்பும் மிகவும் நெரிந்து, கரீல் கரீல் என=தீய்ந்து போகவும், பேய் குதிக்க=பேய்கள் குதிகொள்ளவும், நிணங்கள் குழூ குழூ என=தசைகள் குவியவும், வாய் புதைத்து விழுந்து=(அசுர சேனைகள்) வாயைப் பொத்திக் கொண்டு விழுந்து, ஐயோ ஐயோ என=ஐயோ ஐயோ என்று அலறவும், உதிரம் ஆறாய்=உதிர வெள்ளம் ஆறாய் ஓடவும், வேலை வற்றி வரண்டு சுறீல் சுறீல் என=கடல் அறவே சுவறி சுறீல் என்று சத்திக்கவும், மாலை வெற்பும் இடிந்து திடீல் திடீல் என=அத்த கிரியும் ஏனைய கிரிகளும் திடீல் திடீல் என்று இடிந்து விழவும், மேன்மை பெற்ற ஜனங்கள்=பெருமைமிக்க முனிவர்களும் தேவர்களும், ஐயா ஐயா என=ஐயா ஐயா என்று, இசைகள் கூற=துதி செய்யவும், வேல் எடுத்து நடந்த திவாகரா=வேலாயுதத்தை எடுத்துக்கொண்டு போர்க்களத்தில் நடந்த சிவசூரியரே! அசல=மலையிடத்தே வாழும், வேடுவப் பெண் மணந்த புய அசல=வள்ளி நாயகியாரை மணந்துகொண்ட மலைபோன்ற தோளையுடையவரே! தமிழ் வேத வெற்பில் அமர்ந்த=தமிழ் வழங்கும் வேதாசலம் என்னும் திருக்கழுக்குன்றத்தில் விரும்பி வாழ்கின்ற, கிருபை ஆகர=கருணைக்கு உறைவிடமானவரே! சிவ குமரவேளே=சிவகுமாரரே! ஓலம் இட்ட சுரும்பு தனா தனா என=ரீங்காரம் செய்கின்ற வண்டுகள் கூந்தலில் தனா தனா என்று சத்திக்கவும் (ஏ-அசை) சிரத்தில் விழுங்கை= தலையில் தலை யலங்காரங்கள், பளீர் பளீர் என=பளீர் பளீர் என்று மின்னவும், ஓசை பெற்ற சிலம்பு கலீர் கலீர் என=ஒலியையுடைய பாதச் சிலம்புக்ள கலீர் கலீர் என்று சத்திக்கவும், விரக லீலை=காம லீலையின் எண்ணம், ஓர் மிடற்றில் எழும்புள் குகூ குகூ என=தனிமையான நெஞ்சத்தில் உண்டாகி பறவையின் குரல்போல் குகூ என்று படபடப்புறவும், வேர்வை எமத்த எழுந்து சலா சலா என=மிகவும் வேர்வையுண்டாகி சலசலப்புறவும், ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீர் என=மயிர்க் கூச்சலுற்று சிலிர்ப்புறவும், அமுதமாரன் ஆலயத்துள் இருந்து குபீர் குபீர் என=அமுதம் போன்ற மன்மதன் உள்ளத்தில்இருந்து குபீர் என்று வேகத்துடன், (ஏ-அசை) குதிக்க=குதிக்கவும், உடம்பு விரீர் விரீர் என=உடம்பு விரிந்துபோவது போல துன்புறவும், ஆரமுத்தம் அணிந்து அளா அளா என=முத்தாரங்களை யணிந்து அளவளாவியும், மருவு மாதர்= தழுவுகின்ற விலைமகளிருடைய, ஆசையில் கைகலந்து=ஆசையினால் கைகலந்து உறவாடி, சுமா சுமா=பயன் சிறிது மி்ன்றி, பவசாகரத்தில் அழுந்தி=பிறவிக் கடலில் அழுந்தி, எழா எழாது=அதனின்றும் எழும் வகையின்றி வாடும் அடியேனுடைய, உளம் ஆறு எழுத்தை நினைந்த=உள்ளத்தில சடாக்கரமந்திரத்தைத் தியானித்து, குகா குகா என வகை வராதோ=குகா குகா என்று துதிக்கும் தன்மை உண்டாக மாட்டாதோ? |