பக்கம் எண் :


428 திருப்புகழ் விரிவுரை

 
92

       வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு           மபிராம
           வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை           முடிதோய
      ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி                 புயநேய
           ஆத ரத்தொ டாத ரிக்க ஆன புத்தி          புகல்வாயே
      காது முக்ர வீர பத்ர காளி வெட்க                    மகுடாமா
            காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி       யிமையோரை
      ஒது வித்த நாதர் கற்க வோது வித்த                முனிநாண
           ஓரெழுத்தி லாறே ழுத்தையோது வித்த       பெருமாளே.

பதவுரை

வேத வெற்பில=வேதாசலமாகிய திருக்கழுக்குன்ற மலை மேலும், புனத்தில்= வள்ளிநாயகியாரது தினைப்புனத்திலும், மேவி நிற்கும்=விரும்பி நிற்கும், அபிராம=சிறந்த பேரழகுடையவரே! வேடுவச்சி=வேட்டுவகுல விளக்காகிய வள்ளியம்மையாருடைய, பாத பத்ம மீது=திருவடித்தாமரை மீது, செச்சை முடி தோய=வெட்சிமலரை யணிந்துள்ள தேவரீருடைய திருமுடி படியுமாறு பணிந்த, ஆதரித்து வேளை புக்க=அன்பு வைத்து தக்க சமய மறிந்து சென்ற, ஆறு இரட்டி புய நேய=பன்னிரு புயாசலங்களையுடைய நண்பரே!  காதும்=மறநெறிநின்றாரைக் கொல்லுந் தன்மை யுடையவரும், உக்ர= பயங்கரமான வருமாகிய, வீரபத்ரகாளி வெட்க=வீரபத்ரகாளி யம்மையார் நாணுமாறு, மகுடம் ஆகாச முட்ட=திருமுடி ஆகாயத்தில முட்டுமாறு வளர்ந்து நின்று, வீசிவிட்ட காலர்=தங்கன் முதலியோரை எடுத்து வீசி எறிந்த வீரபத்திரர், பத்தி இமையோரை= அன்பின் மிக்க தேவர்கள் முதலியோரை, ஓதுவித்த நாதர் கற்க=வேதசிவாகமங்களைக் கற்பித்த சிவபெருமான் கற்றுக் கொள்ளுமாறும், ஓதுவித்த முனிநாண=பிரணவ மந்திரார்த்தத்தைச் சொல்வதற்கு முயன்ற பிரமதேவன் வெட்குமாறும், ஓர் எழுத்தில் ஆறு எழுத்தை ஓதுவித்த=ஓர் எழுத்தாகிய பிரணவமந்திரத்தில் ஆறெழுத்துக்களையும் அட்கி உபதேசித்த, பெருமாளே=பெருமையின் மிக்கவரே!  ஆதரத்தோடு=கருணையோடு, ஆதரிக்க=அடியேனைக் காப்பாற்றும் பொருட்டு, ஆன புத்தி புகல்வாயே= அடியேனுக்குத் தகுந்த அறிவைச் சொல்லியருள்வீர்.

பொழிப்புரை

வேதாசலமாகிய திருக்கழுக்குன்றத்திலும், வள்ளியம்மையாருடைய தினைப் புனத்திலும் விரும்பி வாழுகின்ற கட்டழகின் மிக்கவரே!  வேட்டுவகுலத்தில் அவதரித்த வள்ளிநாயகியாரது திருவடித் தாமரையில் வெட்சிமலைரைச் சூடியுள்ள உமது திருமுடி தோய வணங்கி, அவ்வம்மையார் மீது அன்பு வைத்து சமயமறிந்து தினைப்புனஞ் சென்ற பன்னிருபுயா சலங்களை யுடைய நண்பரே!  கொல்லுந் தன்மையும் பயங்கரமும், வீரமும்