பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 429

 

உடைய பத்ரகாளி நாணுமாறும், மகுடம் ஆகாயம் வரை செல்லுமாறும் பேருருக் கொண்டு, தக்கனாதியரை எடுத்து வீசி எறிந்த வீரபத்திரர், அன்புமிக்க அமரர் முதலியோருக்கு வேத சிவாகமங்களைக் கற்பித்த சிவபெருமான் கற்கவும், பிரணவ மந்திரார்த்தத்தை விளக்க முயன்ற பிரமதேவன் நாவும், ஓ என்ற ஓரெழுத்தில் ஆறு எழுத்தையும் ஓதுவித்த பெருமிதமுடையவரே!  அன்புடன் அடியேனைக் காப்பாற்றுதற்கு ஆன நல்லறிவைப் புகன்று அருள்வீர்.

விரிவுரை

வேதவெற்பு

இது திருக்கழுக்குன்றம், வேதங்கள் மலையுருக் கொள்ள அதன்மீது வேதாதிபராகிய சிவபெருமான் எழுந்தருளியதால் வேதாசலம் எனப்படும். அதி்ஷ்டவசுக்கள், நந்தி, இந்திரன், பசு, வராகம் முதலியோர் இத்தலத்தில வழிபட்டு நற்பேறு பெற்றனர். சண்டர் பிரசண்டர் என்னும் இருவரும் கிருதயுகத்திலும், சம்பாதி சடாயு என்னும் இருவர் திரேதா யுகத்திலும், சம்புகுத்தர் மாகுத்தர் என்னும் இருவரும் துவாபரயுகத்திலும், கழுகுருவுடன் வழிபட்டு நற்கதி பெற்றனர். இக்கலியுகத்தில் புஷா, விருத்தா என்னுந் தவசிகள் கழுகுருவுடன் இன்றும் இருந்து வருவது கண்கூடு. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் சங்கு தீர்த்தம் என்ற அழகிய தடாகம் ஒன்று உண்டு. இப்பொழுதும் அத்தீர்த்தத்தில் முழுகி மலைவலம் வந்து நோய் தீரப் பெறுவோர் பலர்.

மிகப்புனிதமான க்ஷேத்திரம், மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் காட்சி தந்த திருத்தலம்.

“கணக்கிலந் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக் குன்றிலே”

காதுமுக்ர, , , ,கால:-

தக்கன் சிவபெருமானிடம் தவமிருந்து வரம் பல பெற்று தருக்குற்று, சிவபெருமானை மதியாது தேவர்களைப் பொருள் படுத்தி வேள்வி செய்யத் தொடங்க, நன்றி கொன்றார் எய்து நெறி இதுவே என்று உலகம் உணர, சிவபெருமான் வீரபத்திரரை யுண்டாக்கியனுப்பி தக்கயாகத்தை யழித்த வரவாற்றைக் கந்தபுராணத்திலும் சிவமகாபுராணத்திலும் காண்க.

பத்தியிமையோர்:-

வரிசையாயுள்ள தேவர் என்றும் பொருள் கொள்ளலாம்.