ஓதுவித்த நாதர்:- சகல தேவர்களையும் ஓதுவித்தவர் சிவபெருமானேயாவார். ஓதுவித்த முனிநாண:- “பிரணவ மந்திரப் பொருள் யாது” என்று பிரமதேவனை குமாரக் கடவுள் வினாவ, பிரணவப் பொருள் முருகவேளே என்று உணராத பிரமன், முருகவேளுக்கு அதனையுரைக்கத் தொடங்கினான். அவ்வாறு தொடங்கிய அவன், ஆறுமுகக் கடவுள் சிவபெருமானுக்கே அதனை உபதேசிக்கும்போது, தன் அறியாமையை எண்ணி நாணங் கொண்டனன். ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே:- ஓரெழுத்து பிரணவ மந்திரம், ஓ, இதில் ஆறெழுத்தாவன, அ, உ, ம, நாதம், விந்து, கலை என்பன. இதன் விரிவை தக்கோர் வாய்க் கேட்டுத் தெளிக. கருத்துரை வேதவெற்பிலும் தினைப்புனத்திலும் வாழும் அழகரே! வள்ளி மணவாளரே! சிவனாருக்கு ஒரு மொழி யுரைத்த குருபரரே! அடியேனுக்கு நல்லறிவைப் புகன்று ஆட்கொள்வீர். பேறை நகர் நீலமயில் சேருமந்தி மாலைநிக ராசி யந்த காரமிக வேநி றைந்த குழலாலும் நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர னேர்தருமு கார விந்த மதனாலும் ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள் ஆசை வலை வீசு கெண்டை விழியாலும் ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்த னாகிமயல் நானு ழன்று திரிவேனோ கோலவுரு வாயெழுந்து பாரதனை யேயிடந்து கூவிடுமு ராரி விண்டு திருமார்பன் கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெ ழுந்த கோபவரி நார சிங்கன் மருகோனே பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள் பேர் பெரிய வேல்கொள் செங்கை முருகோனே |