பேடைமட ஓதி மங்கள் கூடி விளை யாடு கின்ற பேறை நகர் வாழ வந்த பெருமாளே. பதவுரை கோல உருவாய் எழுந்து=அழகிய பன்றியின் வடிவத்தைக் கொண்டு, பார் அதனையே இடந்து=பூமியைப் பிளந்து கொண்டு சென்று, கூவிடு=பூமியை மீட்டு வந்தவரும், முராரி=முரன் என்ற அசுரனை வதைத்தவரும், விண்டு=விஷ்ணுவும், திருமார்பன்=இலக்குமியை மார்பில் கொண்ட வரும், கூடம்உறை=கூட்டத்தில் இருந்த, நீடு செம்பொன் மா மதலை ஊடு எழுந்த=நீண்ட சிவந்த பொன்னாலாகிய தூணிலிருந்து தோன்றிய, கோப அரி நாரசிங்கன்=கோபம் மிகுந்த நரசிங்கமூர்த்தியுமாகிய திருமாலின், மருகோனே=மருகரே! பீலி மயில்மீது உறைந்து=தோகை நிறைந்த மயில்மீது வீற்றிருந்து, சூரர் தமையே செயம் கொள்=வேலாயுதத்தை யேந்திய, செம் கை=சிலந்த திருக்கரத்தையுடைய, முருகோனே=முருகக் கடவுளே! பேடை மட ஓதிமங்கள்= அறியாமையுள்ள பெண் அன்னங்கள், கூடி விளையாடுகின்ற=ஒன்று கூடி விளையாடுகின்ற, பேறை நகர் வாழ வந்த=பெறும் பேறு நகரில் வாழுகின்ற, பெருமாளே=பெருமையில் மிகுந்தவரே! நீலமயில் சேரும்=நீல மயில்கள் சேர்ந்து விளையாடுகின்ற, அந்தி மாலை நிகர் ஆகி=மாலைப் பொழுதுக்கு ஒப்பதாகி, அந்தகாரம் மிகவே நிறைந்த=பேரிருள் மிகவும் நிறைந்துள்ள, குழலாலும்=கூந்தலாலும், நீடும் அதிரேகை இன்பம் ஆகிய=நீடித்துள்ள மிக்க இன்பத்தைத் தருவதாகிய சலாப= இன்பமாய பேசத்தக்க, சந்த்ரன், நேர் தரு=சந்திரனையொத்த, முக அரவிந்தம் அதனாலும்=முகமாகிய தாமரையாலும், ஆலின் நிகர் ஆன=ஆல் இலைக்கு ஒப்பான, உந்தியாலும்=வயிறாலும், மடவார்கள் தங்கள்=பொது மாதர்கள் தங்களுடைய, ஆசைவலை வீசு கெண்டை விழியாலும்=ஆசை வலையை வீசுகின்ற மீன் போன்ற கண்களாலும், ஆடிய கடாம்இசைந்த=கடைந்தெடுத்த குடம் போன்ற, வார் முலைகளாலும்=இரவிக்கையுடன் கூடிய தனங்களாலும், மந்தன் ஆகி=அறிவு மழுங்கியவனாகி, மயல் நான் உழன்று விடுவேனோ=அடியேன் மயக்கங்கொண்டு கலங்கித் திரியலாமோ? பொழிப்புரை அழகிய பன்றியுருவத்தை யெடுத்து, பூமியைத் தோண்டிச் சென்று, பூமியை மீடடு வந்தவரும், முரன் என்ற அசுரனை வதைத்தவரும் விஷ்ணுவும், இலக்குமியை ஏந்திய திருமார்பரும், கூடத்தில் இருந்த நீண்ட பொன் மயமான தூணில் தோன்றியவருமாகிய நரசிங்கப் பெருமானுடைய திருமருகரே! தோகையுடைய மயில் வாகனத்தில் அமர்ந்து, சூராதி யவுணர்களை வென்று புகழ் பெற்ற வேலாயுதத்தைத் தரித்த சிவந்த கரத்தையுடைய முருகக் கடவுளே! அறியாமையுடைய பெண் அன்னங்கள் ஒன்றுபட்டு விளையாடுகின்ற பெறும் பேறு என்ற திருத் |