பேறைநகர்:- பெறும்பேறு என்ற திருத்தலம். அகத்தியருக்குப் பெரிய பேற்றினைத் தந்த தலம். அதனால் பெறும்பேறு என்ற பேர் பெற்றது. இத்தலம் செங்கற்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த தொழுப்பேடு என்ற புகைவண்டி நிலையத்துக்கு அருகில் இருக்கின்றது. சிறிய மலைமீது அழகிய திருக்கோயில் விளங்குகின்றது. இங்கு ஆண்டுதோறும் அன்பர்கள் திருப்படி விழா புரிகின்றார்கள். கருத்துரை பேறைநகரில் வாழும் பெருமானே! மாதர் மயில் தீர்த்துக் காத்தருள்வீர்! மயிலம் மயிலம் தென்னார்க்காடு மாவட்டம், புகைவண்டி நிலையம் உண்டு. புகைவண்டி நிலையத்திலிருந்து இரண்டு மைலில் மலையின் மீது கோயில் அமைந்துள்ளது. இங்கு முருகவேள் கண்கொள்ளாத காட்சியும் மாட்சியும் பெற்று விளங்குகின்றார். கள்ளிப்பாலையே பருகிக் கொண்டு ஆயிரம் ஆண்டுகள் யோக நிஷ்டையில் இருந்த பாலயோகியின் சமாதி இங்கு உண்டு. அவருடைய வழிவழி வந்த சிவஞான பாலைய சுவாமிகள் மடாலயம் மிகவும் பெருமை வாய்ந்தது. கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ விடமிஞ்சு பாதக வேலோ சேலோ குழைகொண்டு லாவிய மீனோ மானோ எனுமானார் குயில்தங்கு மாமொழி யாலே நேரே யிழைதங்கு நூலிடை யாலே மீதூர் குளிர்கொங்கை மேருவி னாலே நானா விதமாகி உலைகொண்ட மாமெழு காயே மோகா யலையம்பு ராசியி னூடே மூழ்கா வுடல்பஞ்ச பாதக மாயா நோயா லழிவேனோ உறுதண்ட மாசமொ டாரோ வாரா |