பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 435

 

      எனையண்டி யேநம னார்தூ தானோர்
      உயிர்கொண்டு போய்விடு நாள் நீ மீதா      னருள்வாயே
அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ
      எனநின்று வாய்விட வேநீள் மாசூ
      ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா             யிடவேதான்
 அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ
      ரனலங்கை வேல்விடும் வீரா தீரா
      அரு மந்த ரூபக ஏகா வேறோர்                வடிவாகி
மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய்
      குறமங்கை யாளுட னேமா லாயே
      மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ்       குமரேசா
 மதிமிஞ்சு போதக வேலா ஆளா
      மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா
      மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர்       பெருமாளே.

பதவுரை

அலைகொண்ட வாரிதி=அலைவீசும் கடல், கோ கோ கோ கோ என=கோ கோ என்று ஒலித்து, நின்று வாய் விடவே=வாய்விட்டு நின்று ஓலமிட, நீள்மாசூர்=அதனுள் மாமரமாய் நின்ற சூரபன்மன், அணி அம் சராசனம் வேறாய்=வைத்திருந்த வில் வேறுபட்டு விழ, நீறாய் இடவே தான்=பொடியாகுமாறு, அவிர்கின்ற சோதிய=ஒளி விடுகின்ற ஒளியைக் கொண்டதும், வார் ஆர்=நேர்மை நிறைந்ததும், நீள் சீர்=பெருமை நீண்டதும், அனல்=நெருப்பைக் கொப்பளிப்பதுமான, அம் கை வேல்விடும் வீரா= அழகிய கரத்தில் இருப்பதுமான வேலைவிட்ட வீரரே!  தீரா=தீரரே!  அருமந்த ரூபக= அருமையான வடிவையுடையவரே!  ஏகா=ஒப்பற்றவரே!  வேறு ஓர் வடிவு ஆகி=வேற்று வடிவைக் கொண்டு, மலைகொண்ட வேடுவர் கான்ஊடே போய்=மலையை இருப்பிடமாகக் கொண்ட வேடர்களின் காட்டில் சென்று, குறமங்கையாள் உடனே= வள்ளி பிராட்டியார்மீது, மால் ஆயே=அன்பு வைத்து, மயல் கொண்டு உலா=மோகங் கொண்டு உலாவி, அவள் தாள் மீதே வீழ்=வேளுடைய பாதத்தின் மீது வீழ்ந்து பணிந்த, குமர ஈசா=குமாரக் கடவுளே!  மதி மிஞ்சு போதக=ஞானமிகுந்த ஞானா சாரியரே!  ஆளா மகிழ் சம்பு தொழு பாதா=தொண்டனாக உபதேசத்தைப் பெற்று நின்று மகிழ்ந்த சிவபெருமான் தொழுகின்ற திருவடியையுடையவரே! நாதா= தலைவரே!  மயிலம் தண் மாமலை வாழ்வே=மயிலம் என்ற குளிர்ந்த பெருமையான மலையில் வாழ்கின்றவரே!  வானோர்=தேவர்கள் போற்றுகின்ற, பெருமாளே= பெருமையின் சிறந்தவரே!   கொலைகொண்ட போர் விழி=கொலைத் தொழிலைக் கொண்ட போருக்குரிய கண்கள், கோலோ=அம்போஇ வாளோ=வாளாயுதமோ, விடம் மிஞ்சு பாதக=நஞ்சு பாவத் தொழில் செய்யவல்ல, வேலோ=வேலோ, சேலோ=சேல் மீனோ, குழை கொண்டு உலாவிய=காதில் உள்ள தோட்டினைத்