தொடும் அளவுக்கு உலாவியவரும், மீனோ=மீனோ, மானோ எனும்=மானோ என்று சொல்லத்தக்க, மானார்=பெண்களின், குயில் தங்கு மாமொழியாலே=குயிலின் குரல் போல் அமைந்த சிறந்த இனிய சொற்களாலே, நேரே இழைதங்கு நூல் இடையாலே= கண்ணெதிரே தோன்றும் நூலிழை போல் மெல்லிய இடையினாலே, மீது ஊர் குளிர் கொங்கை மேருவினாலே=மேலே பொருந்தியுள்ள தனம் என்ற மேரு மலையாலே, நானாவிதம் ஆகி=பலவகையாக நெஞ்சங் கலங்கி, உலைகொண்ட மாமெழுகு ஆயே= நெருப்பின் உறையிற்பட்ட நல்ல மெழுகு போல் உருகி, மோக ஆய் அலை அம்பு ராசியின் ஊடே மூழ்கா=காமம் என்னும் அலைவீசும் கடலினுள் முழுகி, உடல் பஞ்ச பாதகமாயா=உடை ஐந்து பாதத்துக்கும் ஈடாகி, நோயால் அழிவேனோ=நோயினால் அழிவேனோ? உறுதண்ட பாசமொடு=கையில் உள்ள தண்டாயுதம் பாசக் கயிறு இவைகளுடன், ஆரவாரா=ஆரவாரஞ் செய்து, எனை அண்டியே=அடியேனை நெருங்கி வந்து, நமனார் தூது ஆனோர்=யமனுடைய தூதர்கள், உயிர்கள் கொண்டு போய்விடும் நாள்=என்னுடைய உயிரைக் கொண்டுபோய் விடும் அந்த நாளில், நீ மீதாள்=உமது மேன்மை பொருந்திய பாதமலரை, அருள்வாயே=தந்தருளுவீராக. பொழிப்புரை அலைகளையுடைய கடல் கோ கோ என்று வாய்விட்டு ஒலிக்க, அக்கடலில் நீண்ட மாமரமாய் நின்ற சூரபன்மனுடைய அழகிய வில் வேறுபட்டுத் தூளாகுமாறு ஒளியும் நேர்மையும் பெருமையும் உடைய நெருப்புப் போன்ற வேலைக் கையில் எடுத்து விடுத்த வீர மூர்த்தியே! தீரரே! அருமை வாய்ந்த வடிவினரே! ஒப்பற்றவரே! வடிவம் மாறி மலையிடத்து வாழ்கின்ற வேடர்களின் காட்டிற் சென்று, குறமாது மீது அன்பு கொண்டு, மையலால் அவள் காலின் மீது வீழ்ந்த குமாரக் கடவுளே! தொண்டரைப் போல் மகிழ்ந்து சிவபெருமான் தொழுத பாதங்களையுடையவரே! தலைவரே! குளிர்ந்த மயிலம் என்ற பெருமை மிகுந்த மலையில் வாழுகின்றவரே! தேவர்கள் போற்றும் பெருமிதமுடையவரே! கொலைத் தொழிலைச் செய்து போர் புரியும் கண்கள் அம்போ? வாளாயுதமோ? நஞ்சு நிறைந்து பாவத் தொழில் புரியும் வேலோ? சேல் மீனோ? காதில் உள்ள தோடு வரை சென்று உலவி வரும் மீனோ? மானோ? என்று சொல்லத்தக்க மாதர்களின், குயில் போன்ற இனிய மொழிகளாலே, எதிரில் தோன்றும் நூல்போன்ற இடையினாலே, மேலே பொருந்தியுள்ள குளிர்ந்த தனமாகிய மேரு மலையாலே பலவிடமாக நெஞ்சங் கலங்கி, உலையிட்ட மெழுகுபோல் உருகி, மோகக் கடலில் முழுகி, உடல் ஐம்பெரும் பாவங்கட்கும் ஈடாகி ஒழியாத நோயால் அழிவேனோ? தண்டாயுதமும் பாசக் கயிறும் எடுத்துக் கொண்டு ஆரவாரஞ் செய்த யமதூதர்கள் என்னை நெருங்கி வந்து உயிரைக் கொண்டு |