பக்குவப்படாத ஆன்மாக்கட்கு இறைவன் தன் சொரூபத்கை் காட்டாது மானுடச் சட்டை தாங்கியே அருள் புரிவான் என்ற உண்மையை இது உணர்த்துகின்றது. அவள் தாள்மீதே வீழ் குமரேசா:- வள்ளியின் பாதத்தில் பணிந்தார் என்பது அவருடைய அளப்பற்ற பெருங் கருணையைக் குறிக்கிறது. மதிமிஞ்சு போதக:- ஞானமே வடிவாய ஆசிரியர் முருகர். அவரைக் குருவாகக் கொண்டாலன்றி மெய்ஞ்ஞானத்தைப் பெற முடியாது. “முருகன் தனிவேல் முனி நம்குருவென் றருள்கொண்டறியார் அறியுந் தரமோ?” -கந்தரநுபூதி. கருத்துரை மயிலம் மேவிய வரதனே! மாதர் மயக்கில் சிக்கி மடியு முன் உன் மலர்ப்பாதந் தந்தருள்வீர். திருச்சிராப்பள்ளி திரிசரன் என்ற அசுரன் வழிபட்டது. இரத்தினாவதியென்ற செட்டிப் பெண்ணின் அன்புக்காக இறைவர் தாயாக வந்து மருத்துவஞ் செய்தருளினார். அதனால் அங்குள்ள சுவாமிக்குத் தாயுமான தயாபரன் என்ற பெயர் ஏற்பட்டது. சைவ எல்லப்ப நாவலர் பாடிய செவ்வந்திப் புராணமும் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடிய உறையூர்ப் புராணமும் இத்தலத்தின் பெருமையை விளக்குவன. சம்பந்தர், அப்பர் தேவாரம் பெற்ற திருத்தலம். அங்கை நீட்டிய ழைத்துப் பாரிய கொங்கை காட்டிம றைத்துச் சீரிய அன்பு போற்பொய்ந டித்துக் காசள வுறவாடி அம்பு தோற்றக ணிட்டுத் தோதக இன்ப சாஸ்த்ரமு ரைத்துக் கோகிலம் அன்றில் போற்குர லிட்டுக் கூரிய நகரேகை பங்க மாக்கிய லைத்துத் தாடனை கொண்டு வேட்கையெ ழுப்பிக் காமுகர் பண்பில் வாய்க்கம யக்கிக் கூடுத லியல்பாகப் பண்டி ராப்பகல் சுற்றுச் சூளைகள் |