தங்கள் மேற்ப்ரமை விட்டுப் பார்வதி பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ அருள்வாயே எங்கு மாய்க்குறை வற்றுச் சேதன அங்க மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும் இன்ப மாய்ப்புகழ் முப்பந் தாறினின் முடிவேறாய் இந்த்ர கோட்டிம யக்கத் தான்மிக மந்த்ர மூர்த்தமெ டுத்துத்தாமத மின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல வயலூரா செங்கை வேற்கொடு துட்டச் சூரனை வென்று தோற்பறை கொட்டக் கூளிகள் தின்று கூத்துந டிக்கத் தோகையில் வரும்வீரா செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு தென்சி ராப்பளி வெற்பிற் றேவர்கள் பெருமாளே. பதவுரை எங்குமாய்=எங்கும் நிறைந்தவராய், குறைவு அற்று=குறைவிலாதவராய், சேதன அங்கமாய்=அறிவே அங்கமானவராய், பரி சுத்தத்தோர் பெறும் இன்பமாய்=தூய அன்பர்கள் பெற்று மகிழும் இன்பப் பொருளாய், புகழ் முப்பதாறினின் முடிவுவேறாய்= புகழ் பெற்ற முப்பத்தாறு தத்துவங்களின் முடிவுக்கும் வேறானவராய், இந்த்ரகோட்டி மயக்கத்தால்=இந்திராதி கூட்டத்துத் தேவர்கள் கலந்து ஒன்று கூடி, மிக மந்த்ர மூர்த்தம் எடுத்து=சிறந்த மந்திர ரூப பூசனை செய்து, தாமதம் இன்றி வாழ்த்திய=தாமதமில்லாமல் வாழ்த்திய, சொர்க்க காவல்=தேவலோக காவலரே! வயலூரா=வயலூரில் வாழ்பவரே! செம்கை வேல் கொடு=சிவந்தகரத்தில் உள்ள வேலாயுதத்தைக் கொண்டு, துட்ட சூரனைவென்று=கொடியவனான சூரபன்மாவை வென்று, தோல்பறை கொட்ட= தொலினால் செய்த பறைகள் ஒலிக்க, கூளிகள் தின்று கூத்து நடிக்க=பேய்கள் நிணங்களையுண்டு கூத்தாடி மகிழ, தோகையில் வரும் வீரா=மயிலின் மீது வந்த வீரமூர்த்தியே! செம்பொன்னால் திகழ்=செம்பொன்னால் விளங்கும், சித்ரகோபுர=அழகிய கோபுரத்தின் மீது, மஞ்சு இராபகல் மெத்த சூழ்தரு=மேகங்கள் இரவும் பகலும் மிகுதியாகச் சூழ்ந்துள்ள, தென்சிராப்பள்ளி வெற்பில்=அழகிய திரிசிராப்பள்ளி மலையில் எழுந்தருளியிருக்கும், தேவர்கள்=தேவர்கள் போற்றும், பெருமாளே=பெருமையிற் சிறந்தவரே! அம் கை நீட்டி அழைத்து=அழகிய கையை நீட்டி அழைத்தும், பாரிய கொங்கை காட்டி மறைத்து=பருத்த தனங்களைக் காட்டி மறைத்தும், சீரிய அம்புபோல் பொய் நடித்து=சிறந்த அன்புடையவர்களைப் போல் பொய்யாக நடித்தும், காசு அளவு உறவு ஆடி=கொடுக்கின்ற காசுக்கு ஏற்ப உறவு செய்து, அம்பு தோற்ற கண் இட்டு= அம்பும் தோற்கும்படியான அத்துணை கூர்மையுடைய கண்ணால் மயக்கியும், தோதக இன்ப சாஸ்த்ரம் உரைத்து=வஞ்சகம் நிறந்த காம இன்ப நூல்களை எடுத்துப் பேசியும், |