விரிவுரை அங்கை நீட்டியழைத்து:- பொது மாதர்கள் நடுத் தெருவில் நின்று, அவ்வழி போகின்ற, தனம் படைத்த இளைஞர்களைக் கண்காட்டி கை நீட்டி என் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைப்பார்கள். காசளவுறவாடி:- ஆடவர்கள் தரும் பொருளின் அளவுக்கு ஏற்ப அவருடன் உறவு செய்வார்கள். இன்ப சாஸ்த்ரம்:- காம நூலில் உள்ள இரகசியங்களை அம்மாதர்கள் வாய்விட்டுப் பேசுவார்கள். “புல்லுதல் சுவைத்திடல் புணர்நகக்குறி பல்லுறல் மத்தனம் பயிலுந் தாடனம் ஒல்லொலி கரணமோ டுவகையாகிய எல்லையில் புணர்நிலைக் கியைந்த என்பவே” -கந்தபுராணம் (இந்திரபுரிப் படலம்). பத்மத்தாள் தொழ அருள்வாயே:- மாதர்கள் மயக்கத்தை தொலைத்து முருகவேளின் திருவடிகளைத் தொழுதல் வேண்டும். எங்குமாய்:- இறைவன் யாண்டும் நீக்கமற நிறைந்தவன். “நிறைவுடன் யாண்டுமாகி நின்றிடும் நிமலமூர்த்தி” -கந்தபுராணம். ஒரு மன்னவனைச் சூழ்ந்து பல புலவர்கள் இருந்தார்கள். ஒரு புதிய புலவன் ஒரு மாங்கனி தந்து அரசனை வணங்கினான். கனியை யேந்திய காவலன் “புலவீர்காள்! கடவுள் இருக்குமிடத்தைக் காட்டுபவர்க்கு இக்கனியைத் தருவேன்” என்றான். புலவர்கள் கயிலையில் இருக்கின்றனர்; திருப்பாற்கடலில் இருக்கின்றனர்; வேத முடிவில் இருக்கின்றார் என்றெல்லாம் கூறினார்கள். ஒரு சிறு பெண் எழுந்து, :மன்னவரே! இறைவன் இருக்குமிடத்தைக் காட்டுபவர்க்கு ஒரு கனி தருவதாகக் கூறினீரே! நீர் |