பக்கம் எண் :


442 திருப்புகழ் விரிவுரை

 

இறைவன் இல்லாத இடத்தைக் காட்டும்; உமக்குப் பன்னிரண்டு பழங்கள் தருகின்றேன்” என்றாள். எல்லோரும் நாணினார்கள். சிறுமியின் செவ்விய மதி நலத்தைக் கண்டு துதி செய்தார்கள்.

குறைவற்று:-

இறைவன் ஒருவனே குறைவிலா நிறைவு உள்ளவன் எத்துணைப் பெருஞ் சிறப்புடையவர்கள்பாலும் ஏதாவது ஒரு குறையிருக்கும்.

சேதன அங்கமாய்:-

சேதனம்-ஞானம். முருகவேள் அறிவையே வடிவாக உடையவர்.

       “ஞானந்தான் உருவாகிய நாயகன் இயல்பை
           நானும் நீயுமாய் இசைத்தும் என்றால் அஃது எளிதோ?
                                                           -கந்தபுராணம்.

       “அறிவுமறி யாமையுங் கடந்த
                     அறிவுதிரு மேனியென் றுணர்ந்துன்
                     அருணசர ணாரவிந்த மேன்று அடைவேனோ”
                                 -(குகையில் நவ) திருப்புகழ்.

பரிசுத்தத்தோர் பெறும் இன்பமாய்:-

தூய அன்பர்கள் பெறுகின்ற பேரின்பம் முருகன்.

       “தூயநிலையேகண்ட முத்தரித யாகமல
                     மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக
                     சுயபடிக மாவின்ப பத்மபதமே”

                                          -(சுருதிமுடி) திருப்புகழ்.

முப்பத்தாறினின் முடிவேறாய்:-

(தத்துவங்களின் விவரத்தை 196-ஆம் பக்கம் பார்க்கவும்) முப்பத்தாறு தத்துவங்களுங் கடந்தவன் இறைவன்.

       “ஆறாறுமீதில் ஞானோபதேசம் அருள்வாயே”
                                        -(மாலாசை) திருப்புகழ்.

இந்த்ரகோட்டி மயக்கத்தான் மிக மந்த்ர ரூபமெடுத்துத் தாமதமின்றி வாழ்த்திய சொக்கக் காவல்:-

கோட்டி-கூட்டம். வடமொழியில் கோஷ்டி யென்பர். முருகனை, இந்திரன் முதலிய தேவ கூட்டங்கள் அன்பின் மிகுதியால் மயக்கத்துடன், மந்திர ரூபமான