வடிவை அமைத்து, சிறிதும் கால விளம்பம் இன்றிப் போற்றிப் புகழ்கின்றார்கள். முருகன் சொர்க்கத்துக்குப் பாதுகாவலர். “எந்தையாங்கரின் ஈண்டி அவன்பெயர் மந்திரங்கொடு மஞ்சனம் ஆட்டினார்” -கந்தபுராணம். செம்பொனாற்றிகழ் சித்திர கோபுர:- செம்பொன் மயமான அழகிய கோபுரத்துடன் கூடிய திருத்தலம் திருச்சிராப்பள்ளி. கருத்துரை திரிசிராப்பள்ளி மேவிய திருமுருகா! உமது பாததாமரையைத் தந்தருள்வீர். அந்தோமன மேநம தாக்கையை நம்பாதெயி தாகித சூத்திர மம்போருக னாடிய பூட்டிது இனிமேல்நாம் அஞ்சாதமை யாகிரி யாக்கையை பஞ்சாடிய வேலவ னார்க்கிய லங்காகுவம் வாஇனி தாக்கையை ஒழியாமல் வந்தோமிது வேகதி யாட்சியு மிந்தாமயில் வாகனர் சீட்டிது வந்தாளுவம் நாமென வீக்கிய சிவநீறும் வந்தேவெகு வாநமை யாட்கொளு வந்தார்மத மேதினி மேற்கொள மைந்தாகும் ராவெனு மார்ப்புய மறவாதே திந்தோதிமி தீதத மாத்துடி தந்தாதன னாதன தாத்தன செம்பூரிகை பேரிகை யார்த்தெழ மறையோதச் செங்காடென வேவரு மூர்க்கரை சங்காரசி காமணி வேற்கொடு திண்டாடிம காமயில் மேற்கொளு முருகோனே இந்தோடிதழ் நாகம காமக்கடல் கங்காளமி னார்சடை சூட்டிய எந்தாதைச தாசிவ கோத்திர னருள்பாலா |