அடியேனுடைய பிதாவும், சதாசிவ கோத்திரன்=சதாசிவ கோத்திரத்திற்குத் தலைவருமாகிய சிவபெருமான், அருள் பாலா=பெற்று அருளிய புதல்வரே! எண் கூடு அருளால்=அளவிடற்கரிய திருவருளால், நௌவி நோக்கியை=மான் போன்ற பார்வையையுடைய வள்ளி நாயகியாரை, நன் பூ மணம் மேவி=நலம்பொருந்திய அழகுடன் திருமணம் செய்துகொண்டு அப்பிராட்டியாருடன், சிராப்பளி என்பார்= திரிசிராப்பள்ளி என்னுந் திருத்தலத்தின் பேரைமாத்திரம் கூறும் பேறு பெற்றவர்களுடைய, மனமேதினி நோக்கிய=உள்ளமாகிய பூமியில் எழுந்தருளியுள்ள, பெருமாளே=பெருமையின் மிக்கவரே! என்னும் ஆர்ப்பு=என்று பெரிய ஒலியுடன் துதிக்கும்படியான தன்மையை, மறவாதே=மனமே! நீ ஒருபொழுதும் மறந்துவிடாதே. பொழிப்புரை ஐயோ! மனமே! நிலையில்லாத இவ்வுடலை நிலைத்திருக்குமென்று நம்பி மோசம் போகாதே, இன்பமும் துன்பமும் நிறைந்த எந்திரம் இவ்வுடம்பு, இது பிரமதேவனால் செய்யப் பெற்றது, அறிவு தெளிந்து பிறகு நாம் இவ்வுடம்பு அழியாது என்று எண்ணி அமைதியுடன் இருப்பது தகாது. கிரௌஞ்ச மலையைப் பஞ்சு பஞ்சாகப் பொடித்தெறிந்த வேலாயுதக் கடவுளுக்கு இடைவிடாத அன்பு செய்து அவர் திருவடியில் அடிமைப் படுவோம். ஆதலால் அங்கு நீ என்னுடன் வருவாயாக, அப்படி அன்பு செய்யாமையால் ஒழியாமல் மாறிமாறி பலப்பல பிறப்புக்களை எடுத்துக் கொண்டே வந்தோம், இனியும் பிறவாதிருக்கும் பொருட்டு முருகக் கடவுளிடத்தில் அன்பு செய்யும் இம் மெய் நெறியே மோக்ஷமும் ஆன்றோர் நெறியுமாகும். ஆதலால் இவ்வன்பு நெறியைப் பெற்றுக் கொள்வாயாக, “நாம் வந்து ஆட் கொள்வோம்” என்று அருட் செலுத்தி மயில் வாகனர் எழுதிக் கொடுத்த கைச்சீட்டாகிய இதனை நீ பெற்றுக்கொள், மங்கலந் தரும் தீருநீற்றையும் பெற்றுக்கொள், அநேகமாக அப் பரமபதி வலிதில் வந்து நம்மை யாட்கொள்ளும் பொருட்டு உவந்திருக்கின்றனர். இவ்வன்பு நெறியை உலகம் மேற்கொள்ளும் பொருட்டும் நீ உய்யும் பொருட்டும், “வலிமையுள்ளவரே! குமாரக் கடவுளே! பெரிய உடுக்கையும், பூரிகையும், பேரிகையும், திந்தோ திமி தீதத தந்தாதன னாதன தாத் தன என்ற தாள பேதங்களுடன் ஒலித்து எழவும், வேதங்களை ஓதவும் சிவந்த காட்டைப்போல் பெருகிவந்த அவுணர்களைச் சர்வ சங்காரஞ் செய்வதில் சிகாமணியாகிய வேலாயுதத்தைக் கொண்டு அவ்வவுணர்களது அலைகளைச் செண்டுபோல் ஆடி அழித்து பெரிய மயில் வாகனத்தின்மீது எழுந்தருளிய முருகக் கடவுளே! சந்திரனையும் |