பக்கம் எண் :


446 திருப்புகழ் விரிவுரை

 

ஆமை ஓட்டையும் சர்ப்பத்தையும் பெருங் கடல்போலப் பெருகி வந்த கங்கா நதியையும் பிரம விட்டுணுக்களின் முழு எலும்புக் கூட்டையும் ஒளிபெற்ற சடையிலும் திருமேனியிலும் தரித்துக் கொண்டிருப்பவரும், அடியேனுடைய தந்தையாரும், சதாசிவ கோத்திரத்திற்குத் தலைவருமாகிய சிவமூர்த்தியின் திருக்குமாரரே!   அளவிடற்கரிய திருவருளால் மான்போன்ற திருப்பார்வையையுடைய வள்ளி நாயகியாரை நலமிகுந்த அழகுடன் திருமணஞ் செய்துகொண்டு திரிசிராப்பள்ளி என்ற திருத்தலத்தின் பேரை மாத்திரம் சொல்லும் பேறு பெற்றவர்களாயினும் அவர்கள் உள்ளமாகிய பூமியில் எழுந்தருளியுள்ள பெருமானே! ” என்னும் பெரிய ஆர்ப்புடன் துதித்தலை மனமே!  நீ ஒருபோதும் மறந்துவிடாதே.

விரிவுரை

அந்தோ மனமே:-

காடுங்கரையும் கால்விட்டோடும் மனக்குரங்கை தான் செய்யும் நல்லுபதேசத்தைக் கேட்கச் செய்ய ஒருமுகப்படுத்தும் பொருட்டு, “அந்தோ” என்றனர். பலர் பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்குமிடத்தில் ஒருவன் ‘ஐயோ’ என்று அலறினால் எல்லோரும் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு ஐயோ என்று கதறினவனை நோக்குவரல்லவா?  மனதை ஒருமுகப் படுத்துதற்கு அருணகிரியார் இந்த உபாயத்தைக் கையாளுகின்றார்.

நமதாக்கையை நம்பாதே:-

ஆக்கப்பட்டதனால் உடலுக்கு ஆக்கை என்ற பேருண்டாயிற்று. யாக்கை நிலயற்றது.

நெருந லுளனொருவன் இன்றில்லை யென்னும்
       பெருமை யுடைத்திவ் வுலகு.                          -திருக்குறள்.

       “இன்றைக் கிருந்தாரை நாளைக்கிருப்பரென்
                     றெண்ணவோ திடமில்லையே”

       “நீர்க்குமிழிக்கு நிகரென்பர் யாக்கை”      -தாயுமானார்.

இவை போன்ற ஆன்றோர் அமுத வாக்குகளை உற்று நோக்குக. மணப்பறையே பிணப்பறையாவதும், மணமகனே பிணமகனாவதும் கண்கூடு.

இயல் அங்காகுவம் வா:-

சுவாமிகள் பல வழியிலும் சென்று சென்று அலைந்தலைந்து கறங்குபோல் பயனின்றித் திரியும் மனதை முருகனிடம்