பக்கம் எண் :


448 திருப்புகழ் விரிவுரை

 

 தகிலொடு சந்தன சேற்றினில்
      முழுகியெ ழுந்தெதிர் கூப்புகை
      யடியின கம்பிறை போற்பட விளையாடிப்
பரிமளம் விஞ்சிய பூக்குழல்
      சரியம ருங்குடை போய்ச்சில
      பறவைக ளின்குர லாய்க்கயல் விழிசோரப்
 பனிமுக முங்குறு வேர்ப்பெழ
      இதழனு துண்டிர வாய்ப்பகல்
      பகடியி டும்படி தூர்த்தனை விடலாமோ
சரியையு டன்க்ரியை போற்றிய
      பரமப தம்பெறு வார்க்ருள்
      தருகணன் ரங்கபு ரோச்சிதன் மருகோனே
 சயிலமெ றிந்தகை வேற்கொடு
     மயிலினில் வந்ததெனை யாட்கொளல்
     சகமறி யும்படி காட்டிய குருநாதா
திரிபுவ னந்தொழு பார்த்திபன்
      மருவிய மண்டப கோட்டிகள்
      தெருவில்வி ளங்குசி ராப்பள்ளி மலைமீதே
 தெரியஇ ருந்தப ராக்ரம
      உருவளர் குன்றடை யார்க்கொரு
      திலதமெ னும்படி தோற்றிய பெருமாளே.

பதவுரை

சரியை உடன்=சரியை மார்க்கத்தையும், க்ரியை போற்றிய=கிரியை மார்க்கத்தையும் மேற்கொண்டு, பரம பதம் பெறுவார்க்கு அருள் தரு=மேலான பதத்தைப் பெற விரும்புவார்க்கு அருளைத் தருகின்ற, கணன்=கண்களையுடையவரும், ரங்கபுர உசிதன்= ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டு உள்ள மேலானவரும் ஆகிய திருமாலின், மருகோனே= மருகரே!  சயிலம் எறிந்த கை வேல் கொடு=கிரவுஞ்ச மலையைப் பொடிபடச் செலுத்திய கைவேலை ஏந்திக் கொண்டு, மயிலினில் வந்து=மயிலின் மீது எழுந்தருளி வந்து, எனை ஆட்கொளல்=அடியேனை ஆட்கொண்ட திருவருளை சகம் அறியும்படி காட்டிய=உலகம் உணரும்படி காட்டியருளிய, குருநாதா= குருமூர்த்தியே!  திரிபுவனம் தொழு பார்த்திபன்=மூன்று புவனங்களும் வணங்கி நின்ற மன்னவன், மருவிய மண்டப கோட்டிகள்=புதுக்கிய மண்டபக் கூட்டங்கள், தெருவில் விளங்கு=வீதியில் விளங்குகின்ற, சிராப்பள்ளி மலை மீதே=திருச்சிராப்பள்ளி மலைமீது, தெரிய இருந்த பராக்ரம= யாவருக்கும் தெரியுமாறு வீற்றிருக்கும் வீரமூர்த்தியே! உருவளர் குன்று உடையார்க்கு= அழகிய வுருவுடன் விளங்கும் குன்றுடையவராகிய தாயான தயாபரர்க்கு, ஒரு திலதம் எனும்படி