பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 451

 

ஆயிரக்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், பதினாறு கால் மண்டபம், மணிமண்டபம், சித்திரமண்டபம் முதலிய இன்னும் காண இருக்கின்றன.

சிராப்பள்ளி மலை:-

வாயுவுக்கும் ஆதிசேடனுக்கும் வலிமையில் யார் பெரியவர் என்ற ஒரு போட்டி நடந்தது.

ஆதிசேடன் தன் ஆயிரம் பணாமகுடங்களால் திருக்கயிலாய மலையின் சிகரங்களை மூடினான். வாயுதேவன் ஓங்கி வீசி கயிலையின் மூன்று சிகரங்களை அடித்துத் தள்ளினான். ஒன்று காளத்தி, ஒன்று திரிசிராப்பள்ளி, ஒன்று திருக்கோணமலை. இந்த மூன்றும் தட்சிண கைலாயம் எனப்படும்.

       முன்னர் வீழ்ந்திடு சிகரிகாளத்தி யாமொழிவர்
       பின்னர் வீழ்நத் திரிசிரா மலையென்னும் பிறங்கல்
       அன்னதின் பிறகமைந்தது கோணமா அசலம்
       இன்ன மூன்றையும் தட்சிணை கயிலையென் றிசைப்பர்.
                                             -செவ்வந்திப் புராணம்.

உருவளர் குன்றுடையார்க்கொரு திலதமெனும்படி தோற்றிய:-

குன்றுடையார் என்ற சொல் திருஞானசம்பந்தர் இத்தலத்தில் பாடியருளிய, நன்றுடையானை என்ற திருப்பதிகத்தில் “சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிருமே” என்ற பகுதியை நினைவூட்டுகின்றது.

சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணிலிருந்து திலகம் போல் முருகர் தோன்றினார்.

கருத்துரை

திரிசிராப்பள்ளி முருகவேளே! மாதர் வசமாகி அடியேன் அலையாமல் ஆண்டருள்வீர்.

98

      அழுதழுது தாசார நேசமு
           முடையவர் போலேபொய் சூழ்வுறும்
           அசடிகள் மாலான காமுகர்           பொன்கொடாநாள்
      அவருடன் வாய்பேசி டாமையு
           முனிதலு மாறாத தோஷிகள்
           அறுதியில் காசாசை வேசைகள்            நஞ்சுதோயும்