விழிகளி னால்மாட வீதியில் முலைகளை யோராம லாரோடும் விலையிடு மாமாய ரூபிகள் பண்பிலாத விரகிகள் வேதாள மோவென முறையிடு கோமாள மூளிகள் வினைசெய லாலேய யெனாவியு மயங்கலாமோ வழியினில் வாழ்ஞான போதக பரமசு வாமீவ ரோதய வயலியில் வேலாயு தாவரை யெங்குமானாய் மதுரையின் மீதால வாயினில் எதிரம ணாரோரெ ணாயிரர் மறிகழு மீதேற நீறுப ரந்துலாவச் செழியனு மாளாக வாதுசெய் கவிமத சீகாழி மாமுனி சிவசிவ மாதேவ காவென வந்துபாடுந் திருவுடை யாய்தீதி லாதவர் உமையொரு பாலான மேனியர் சிரகிரி வாழ்வன தேவர்கள் தம்பிரானே. பதவுரை வழியினில் வாழ்=அருள் நெறியில் வாழ்கின்ற, ஞானபோதக=ஞான உபதேசம் புரியும், பரம சுவாமீ=உலகங்களை யெல்லாம் உடைமையாக உடைய பெரியவரே! வர உதய=சிவபெருமான் தேவர்கட்குத் தந்த வரத்தால் தோன்றியவரே! வயலில் வேலாயுதா= வயலூரில் வாழ்கின்ற வேலாயுதரே! வரை எங்கும் ஆனாய்=மலைகள் அனைத்திலும் வீற்றிருப்பவரே! மதுரையின் மீது ஆலவாயினில்=மதுரையாகிய ஆலவாய் என்ற திருத்தலத்திலே, எதிர்=எதிர்த்து வந்த, அமணார் ஒரு எணாயிரர்=எண்ணாயிரஞ் சமணர்களும், மறி கழு மீது ஏற=அழியுமாரு கழுவின் மீது ஏறவும், நீறு பரந்து உலாவ=திருநீறு எங்கும் பரவுமாறும், செழியனும் ஆள் ஆக=பாண்டியனும் அடிமைப் படவும், வாது செய்=வாது செய்த, கவிமத=தமிழ் மறையாகிய மதத்தைப் பொழிந்த, சீகாழி முனுனி=சீகாழியில் வந்த பெரிய முனிவரே! சிவ சிவ மாதேவ கா என வந்து பாடும்=சிவ சிவா! மகா தேவா! நீர் காப்பாற்றும் என்று இறைவன் முன்வந்து பதிகம் பாடியருளிய, திருவுடையாய்=தெய்வத்தன்மையுடையவரே! தீது இலாதவர்=தீமையில்லாத வரும், உமை ஒரு பாலான மேனியர்=உமாதேவியை ஒரு புறத்தில் கொண்ட திருமேனியரும் ஆன சிவபிரானுடைய, சிரகிரி வாழ்வு ஆன=திரசிரகிரியில் வாழ்வு கொண்டிருக்கும், தேவர்கள்=தேவர்கள் போற்றும், தம்பிரானே=தனிப் பெருந்தலைவரே! அழுது அழுது=மேலும் மேலும் அழுது, ஆசார நேசம் |