பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 453

 

உடையவர் போலே=ஆசாரமும் அன்பும் உடையவர்களைப் போல் நடித்து, பொய் சூழ் உறும்=பொய்யான சூழ்ச்சிகளைச் செய்யும், அசடிகள்=அறிவில்லாதவர்கள், மால் ஆன காமுகர்=தம் மீது மயக்கங் கொண்ட காமிகள், பொன்கொடா நாள்=பொன் கொடுக்க முடியாத நாள்களில், அவருடன் வாய் பேசிடாமையும்=அவர்களோடு வாய் பேசாதிருத்தலும், முனிதலும் மாறாது=கோபித்தலும் நீங்காத, தோஷிகள்= குற்றமுடையவர்கள், அறுதி இல் காசு ஆசை வேசைகள்=முடிவு இல்லாத பணத்தாசை கொண்ட வேசைகள், நஞ்சுதோயும்=நஞ்சு தோய்ந்த, விழிகளினால்=கண்களினால், மாடவீதியில்=மாட வீதிகளில், முலைகளை ஓராமல் ஆரொடும்=தனங்களை ஆராயாமல் எவரோடும், விலையிடும்=விலைக்கு விற்கும், மா மாய ரூபிகள்=பெரிய மாய வடிவினர்கள், பண்பு இலத=நற்குணம் இல்லாத, விரகிகள்=வஞ்சகிகள், வேதாளமோ என=பேயோ என்னும்படி, முறை இடு கோமாள மூளிகள்=கூக் குரலிட்டழுது கும்மாளம் போடும் விகாரமுடையவர்கள், இத்தகைய பொதுமாதர்களின், வினை செயலாலே=மாயச் சூழ்ச்சிகளால், ஆவி உயங்கலாமோ= அடியேனுடைய உயிர் வருந்தலாமோ?

பொழிப்புரை

நன்னெறியில் ஞானோபதேசஞ் செய்யும் பெரிய சுவாமியே! வரத்தால் தோன்றியவரே! வயலூரில் வாழ்பவரே! வேலாயுதரே! எல்லா மலைகளிலும் இருப்பவரே! மதுரையாகிய ஆலவாயில் எதிர்த்த சமணர்கள் எண்ணாயிரம் பேர்களும் கழுவில் ஏறவும், திருநீறு எங்கும் பரவவுமாறும் பாண்டியனும் அடிமைப் படவும் வாது செய்து, தமிழ் வேதமாகிய மதத்தைப் பொழிந்த சீகாழி மாமுனிவரே! சிவசிவா! மகாதேவா! காத்தருள் என்று மதுரையில் வந்து பாடியருளிய தெய்வத் தன்மையுடையவரே! குற்றமில்லாதவரும் உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவருமாகிய சிவபிரானுடைய திரிசிராப்பள்ளியில் வாழ்கின்றவரே! தேவர்கள் போற்றும் பெருமையின் மிகுந்தவரே! மேலும் மேலும் அழுதும், ஆசாரமும் அன்பும் உடையவர்கள் போல் பொய்மையாக நடித்தும் வஞ்சனையைச் செய்யும் அறிவற்றவர்களும், தம்மீது மயக்கமுற்ற காமுகர்கள் தராதபோது, அவருடன் பேசாமலும் கோபித்தும் சாகசம் புரியும் குற்றமுடையவர்களும், முடிவில்லாத பணத்தாசையுடைய வேசைகளும், நஞ்சு படிந்த கண்களினால் மாடவீதியில் தனங்களை ஆராயாமல் எவருடனும் விலைக்குத் தருபவர்களும், பெரிய மாய வடிவத்தினர்களும், நற்குணம் இல்லாத வஞ்சகிகளும், பேயோ பிசாசோ என்னும்படி கூக்குரல் செய்த