பக்கம் எண் :


456 திருப்புகழ் விரிவுரை

 

செழியனும் ஆளாக:-

சம்பந்தப் பெருமானுடைய அருட்டிறத்தைக் கண்ட பாண்டியன் அவருடைய திருவடியில் வீழ்ந்து அடியவன் ஆனான்.

வாதுசெய் கவிமத சீகாழி மாமுனி:-

திருஞானசம்பந்தர் ஞானவேழம். அது தேவாரமாகிய மதத்தைப் பொழிந்தது.

       தளம்பு நெஞ்சுடைய எண்ணாயிரஞ் சமண் தலைவராயோர்
       உளம்பரி வொடுக ழுக்கண் யோசனையகலம் ஏற
       வளம்பட வந்து செய்த வாரணம் என்னும் நாமம்
       விளங்கியதன்று முன்னா மேதகுதராதலத்தே.
                                                       -திருவிளையாடற் புராணம்.

       மண்ணா உடம்பு தங்குருதி மண்ணக்கழுவின் மிசைவைத்த
       எண்ணாயிரவர்க் கெளியரே நாற்பத்தொண்ணாயிரவரே
                                                                         -தக்கயாகப்பரணி.

சிவசிவா மகாதேவகாவென வந்துபாடும் திருவுடையாய்:-

திருஞானாம்பந்தர் சிவபெருமானை அமணருடன் “வாது செயத் திருவுள்ளமே” என்று பாடி வேண்டினார். இந்தவுலகம் சமண இருளால் மூடியழியா வண்ணம் காத்தருள் என்று சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டருளினார்.

தீதிலாதவர் உமையொரு பாலான மேனியர்:-

திருஞானசம்பந்தர் திரிசிராப்பள்ளி தேவாரத்தில், “நன்றுடையானைத் தீயதில்லானை நரைவெள்ளேறு ஒன்றுடை யானை உமையொரு பாகம் உடையானை” என்று பாடியருளியதை இங்கே அருணகிரியார் நமக்கு நினைவூட்டி அந்த அழகிய சொற்களை அமைத்தருளினார்.

கருத்துரை

திரிசிரபுரம் வாழ் தேவா! பரத்தையர் வசமாகி அழியா வண்ணம் பாதுகாத்தருள்வீர்.

99

      இளையவர் நெஞ்சத் தளையமெ னுஞ்சிற்
                றிடைகொடு வஞ்சிக்                                கொடிபோல்வார்
           இணையடி கும்பிட் டணியல்குல் பம்பித்
                திதழமு துந்துய்த்                                      தணியாரக்