சதுர்மறை சந்தத் தொடுபாட................ஆடி:- வேதங்கள் தாமே ஒலி செய்ய இறைவன் நடம் புரிந்தருளுகின்றார். செழுமறையஞ்சொற் பரிபுர:- முருகப் பெருமான் திருவடியில் அணிந்துள்ள தண்டை சதங்கை முதலிய அணிகலன்கள் வேத மந்திரங்களை உச்சரித்து ஒலிக்கின்றன. “மறைசதுர்விதந் தெரிந்து வகைசிறு சதங்கை கொஞ்ச மலரடி” -(அனைவரு) திருப்புகழ். கருத்துரை திரிசிரகிரித் திருமுருகா! மாதரது உறவை மறந்து உனது திருவடியைத் தொழும் அன்பைத் தந்தருளும். பகலவ னொக்குங் களவிய ரத்னம் பவளவெண் முத்தந் திரமாகப் பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம் பரிவென வைக்கும் பணவாசை அகமகிழ் துட்டன் பகிடம ருட்கொண் டழியும வத்தன் குணவீனன் அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண் டலைதலொ ழித்தென் றருள்வாயே சகலரு மெச்சும் பரிமள பதமந் தருணப தத்திண் சுரலோகத் தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந் தழுவஅ ணைக்குந் திருமார்பா செகதல மெச்சும் புகழ்வய லிக்குந் திகுதிகெ னப்பொங் கியவோசை திமிலைத் விற்றுந் துமிகள்மு ழக்குஞ் சிரகிரி யிற்கும் பெருமாளே. பதவுரை சகலரும் மெச்சும்=எல்லோரும் புகழும், பரிமள பத்மம்=நறுமணமுள்ள தாமரை போன்ற, தருணபத=இளமைவாய்ந்த திருவடிகளை யுடையவரே! திண் சுரலோக தலைவர் மகட்கும்=வலிமையுடைய தேவலோகத் தலைவரான இந்திர குமாரியான தேவசேனைக்கும், குறவர்மகட்கும்=குறவர் குமாரியான வள்ளியம்மைக்கும், தழுவ அணைக்கும் |