பக்கம் எண் :


46 திருப்புகழ் விரிவுரை

 

வேண்டிய போதடியார் வேண்டிய போகமது வேண்ட வெறாதுதவு:-

முருகவேள் தன்னை நினைக்கின்ற அடியார்கள், எதனை எதனை எப்போது எப்போது விரும்பி வேண்டுவார்களோ, அதனை அதனை அவ்வப்போது, மறுக்காமல்- வெறுக்காமல், வழங்குவர்.

கருத்துரை

திருவேங்கடமலைமேவும் திருமுருகா! அவலநெறி சென்று அருநரகிடை உழலாவண்ணம் காத்தருள்.

10

சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
      மூண்டவி யாதசம                              யவிரோத
சாங்கலை வாரிதியை நீந்தவொ நாதுலகர்
      தாந்துணை யாவரென                      மடவார்மேல்
ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
      தோய்ந்துரு காஅறிவு                       தடுமாறி
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
       யான் தனி போய்விடுவ                  தியல்போதான்
காந்தளி னானகர மான் தரு கானமயில்
      காந்தவி சாகசர                               வணவேளே
வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
      வேங்கட மாமலையி                     லுறைவோனே
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
      வேண்டவெ றாதுதவு                    பெருமாளே.

பதவுரை

காந்தளின் ஆனகர=காந்தள் மலரைப் போன்ற திருக்கரத்தை யுடையவரே! மாந்தரு=மானால் தரப்பட்ட கானமயில்=காட்டில் வாழ்ந்த மயிலைப் போன்ற சாயலையுடைய வள்ளியம்மையாருடைய, காந்த=கணவரே! விசாக-விசாக நட்சத்திரத்திலே அனற் பிழம்பாக வெளிப்பட்டவரே! சரவண=சரவண தடாகத்தில் தோன்றியவரே! வேளே=எல்லோராலும் விரும்பத்தக்கவரே! காண்தகு தேவர் பதி ஆண்டவனே=பார்ப்பதற்குத் தகுதியான (பேரழகுடைய) பொன்னுலகத்தை (அசுரரிடமிருந்து மீட்டு) ஆட்கொண்டவனே! சுருதி ஆண் தகையே=வேதங்களால் துதிக்கப்பெற்ற சிறந்த வீரரே! இபமின்